தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஷிபா மருத்துவமனை அருகாமையில் இரு இளைஞர்கள் மது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகினர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்களிக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல்(23) மற்றும் வினோத்(18) ஆகிய இரு இளைஞர்களும் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் திரையரங்கில் இன்று(10/01/2019) பகல் படத்திற்கு சென்றுள்ளனர்.
திரையரங்கில் படம் பார்த்துவிட்டு இரு இளைஞர்களும் மது போதையில் அதிவேகமாக அதிராம்பட்டினம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர். இந்நிலையில், அதிக போதையாலும், அதிவேகத்தாலும் நிலை தடுமாறி அதிரை ஷிபா மருத்துவமனை அருகே கீழே விழுந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இரு இளைஞர்களும் பலத்த காயத்துடன் தமுமுக அவசர ஊர்தி மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Your reaction