இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை, விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்..!!

1245 0


கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை, விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் (18.12.2018) செவ்வாய் கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்த போராட்டமானது நா. காளிதாஸ் (நகர செயலாளர்) அவர்களுடைய தலைமையில் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :

●கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும்.
●பாதிக்கப்பட்ட குடிசை வீடு, ஓட்டு வீடு, மற்றும் சேதமடைந்த மாடி வீடுகளுக்கும் முழு நிவாரணம் வழங்கவேண்டும்.
●அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
●பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
●பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்குடுக்க வேண்டும்.
●பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள்,வலைகளுக்கு நிவாரணம் கொடுக்கவேண்டும்.
●மாணவர்களின் கல்வி கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
●நிவாரணம் கேட்டு போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்கினை நீக்க வேண்டும். என்பன கோரிக்கைகளாக வைக்கப்பட்டன.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: