திட்டமிட்டே வஞ்சிக்கப்படும் அதிராம்பட்டினம்
கடந்த வெள்ளிக்கிழமை 16 -11-2018 அன்று கஜா புயலினால் தமிழகத்தின் பெறும்பாலான கடலோர மாவட்டங்கள் பெறும் பாதிப்புக்குள்ளாகியது.
குறிப்பாக கடலோர பகுதியான அதிராம்பட்டினம் 111 கி.மீ வேகத்தின் புயலுக்கு இரையானது ஏறத்தாழ இந்த கிராமம் 90% அழிந்துவிட்டது.
அரசு தரப்பிலிருந்து எந்தவொரு பேரிடர் மீட்பு குழுக்களோ அல்லது அரசு ஊழியர்களோ இதுவரை முற்றிலும் அழிந்த இக்கிராமத்தின் அழிவை ஆய்வு செய்யவோ மீட்பு பணிகளை செய்யவோ முன்வரவில்லை மாறாக திட்டமிட்டே இந்த கிராமம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
புயலினால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்து மக்களுக்கு இதுவரை எந்தவொரு அடிப்படை வாழ்வாதார வசதிகளும் வழங்கப்படவில்லை குறிப்பாக, மருத்துவம், உணவு, குடிநீர், மின்சாரம், போன்றவைகள்.
பச்சிளம் குழந்தைகளும், வயதான முதியவர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் சொல்லொணாத் துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர் தொலைதொடர்புகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இந்த கிராமமே இருள்சூழ்ந்து காணப்படுகிறது கடந்த மூன்று நாட்களாக.
பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் உணரவேண்டும், இல்லையேல் உணர்த்தப்படும்.
ஆக்கம் : வஜிர் அலி.
Your reaction