தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயலானது இரவு நாகை-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் ஒன்றான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசின் புயல் பாதுகாப்பு மையத்தை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். செந்தில் குமார், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடெசன் ஆகியோர் புயல் பாதுகாப்பு மையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதி உள்ளிட்டவைகள் குறித்து இன்று வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தனர்.
Your reaction