மல்லிப்பட்டினம் கட்டயபாலத்தில் இயங்கி வரும் இறால் பிளான்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஒருவர் இன்று மாலை (20/10/2018) பணியை செய்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த கைலி மோட்டாரில் சிக்கி அவருடைய காலும் சிக்கி விட்டது.
பின்பு அவர் கால் முறிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். அவரை, மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்சை இயக்கி சென்ற சட்ட கல்லூரி மாணவர் ஹவாஜா அவர்கள் எங்களுக்கு தெரிவித்தது என்னவென்றால் இன்னும் சில மணி நேரங்களில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மட்டுமே, அவருடைய காலை plastic surgery மூலம் சேர்க்க முடியும், என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
விபத்தில் சிக்கிய நிலையில் இருக்கும் இவர் நாளைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து அவர் மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
இன்னும் சில மணி நேரங்களில் மதுரையை அடைந்து அவருடைய காலை சேர்க்க முடியுமா…..!!!
அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்…!!!
Your reaction