அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கடலோர காவல் துறையினர் மற்றும் மீன்வளத்துறை சார்பாக ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துவருகின்றனர்.
பருவ மழை துவங்கிய நிலையில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழையானது நேற்று முதல் இரவில் தொடர் மழையும் பகலில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வருகின்றது.
தற்பொழுது இன்று(04/10/2018) இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தியரிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(07/10/2018) அன்று கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் அதுமட்டுமின்றி கடலோர பகுதிகளுக்கு ‘ரெட் அலார்ட்‘ விடுத்துள்ளது.
இந்நிலையில் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று
அதிராம்பட்டினம் – கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுகக்கிட்டங்கித் தெரு மற்றும் எரிப்புறக்கரை பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
Your reaction