நாசாவில் தங்கப்பதக்கத்துடன் பிரிலியண்ட் மாணவர்கள்!!

2414 0


அதிரையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள பிரிலியண்ட் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் (கடந்த வருடத்திலிருந்து) கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.

அது போல இந்த வருடமும் மாணவ / மாணவிகளுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

14 மாணவர்கள் அமெரிக்க வின்வெளி ஆய்வகமான நாசாவிற்கு கடந்த 26 தேதி பள்ளித் தாளாளர் சுப்ரமணியன் தலைமையில் சென்றனர்.

பின்னர் அங்கு 3 நாட்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விண்வெளி சோதனைகள், விண்வெளி வீரர்களாவதற்கு அளிக்கப்படும் பயிற்சி, செயற்கைக்கோள்களை கட்டுப்படுத்தி எவ்வாறு இயக்குவது, செயற்கைக்கோள் எப்படி இயக்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும், 1967 – 1973 ஆண்டு இடையில் நிலவுக்குச் சென்று வந்த அப்போலோ மற்றும் சேடர்ன் வி ராக்கெட்டுகளை மாணவர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்டு விண்வெளி சம்பந்தமான தேர்வுகளும் வைக்கப்பட்டது.

இதில் 5 மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கமும் சான்றிதழ்களும் பெற்றனர்.

கல்விச் சுற்றுலா சென்ற பிரிலியண்ட் பள்ளி மாணவர்கள் அடுத்த சில தினங்களில் சுற்றுலா முடிந்து தாயகம் திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: