தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 7ஆம் வார்டில் உள்ள காந்தி நகரில் சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த (29.09.2018) வெள்ளிக்கிழமையன்று பெய்த கனமழையால் அந்த பகுதியில் உள்ள பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.
இந்த பாலம் பொதுமக்கள் வேலைக்குச் செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கும், வாகனங்கள் செல்லவும் முக்கிய நடைப்பாதையாக இருக்கின்றது.
இங்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பாதையில் செல்வதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
ஒரு நாள் பெய்த கனமழைக்கே இப்படி ஆகி விட்டது. மழைக்காலங்களில் என்னவாகுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Your reaction