அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்கள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 11ஆம் நாளான இன்று அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் காதிர்முகைதீன் கல்லூரி எக்ஸ்னோரா அமைப்பின் மாணவர்களுடன் இணைந்து அதிரை முத்தம்மாள் தெருவில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கூண்டுவைத்து பராமரிக்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார். கிராம நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தில்லைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவை லயன் டி.பி.கே.ராஜேந்திரன் துவக்கிவைத்தார். மேலும் முத்தம்மாள் தெருவில் மரக்கன்றுகள் நட்டு, அதனை பராமரிக்கும் வகையில் கூண்டுகளும் வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த பேரா.செய்யது அகமதுகபீர், ஆறுமுகசாமி, சூப்பர் அப்துல்ரஹ்மான் அப்துல்ஜலில், சாராஅகமது, பேரா.ஹாஜாஅப்துல்காதர் மற்றும் காதிர் முகைதீன் எக்ஸ்னோரா மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் சமீர், ஜெயசூர்யா மற்றும் சமூக ஆர்வலர்கள், கிராமவாசிகள் என பலர் கலந்துகொண்டனர்.
Your reaction