தஞ்சை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து தொடர் : இரண்டாம் இடம் பிடித்த அதிரை ESC அணி !(படங்கள்)

Posted by - February 18, 2020

தஞ்சை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து தஜோடர் போட்டி தஞ்சையில் நடைபெற்றது. இத்தொடரில் அதிரை ESC அணியும் பங்கேற்றது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் அதிரை ESC அணி முதல் தகுதி சுற்றில் மேலஉளூர் அணியையும், காலிறுதி ஆட்டத்தில் ஒரத்தநாடு அணியையும், அரையிறுதி ஆட்டத்தில் பட்டீஸ்வரம் அணியையையும் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தனர். பட்டுக்கோட்டை அணியோடு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அதிரை ESC அணி வெற்றியை நழுவவிட்டு இரண்டாம் இடம்

Read More

அதிரையில் நாளை மின் தடை!!

Posted by - February 18, 2020

அதிரை அடுத்த மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் அத்திவெட்டி, முத்துப்பேட்டை, பெரியக்கொட்டை, கன்னியாக்குறிச்சி,தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் நாளை (19.02.2020) புதன்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மதுக்கூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Read More

அதிரை பீச் அப்டேட் வாட்ஸ்அப் குழுமத்தின் நன்றி அறிவிப்பு !

Posted by - February 18, 2020

கடந்த 14.02.2020 வெள்ளிக்கிழமை அன்று கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள், அனைத்து முஹல்லா அமைப்பு மற்றும் அனைத்து சமுதாய அமைப்புகளால் மிக சிறப்பான முறையில் நடத்தி முடிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், திரும்ப பெறக்கோரி வலியுறுத்தியும் மேலும் மற்ற மாநிலங்களில் ரத்து செய்ததை போன்று, நம் மாநிலத்திலும் ரத்தாக வேண்டும், என்று துவா செய்வதோடு, உள்ளூர்/வெளியூர் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு கண்டனத்தை வெளிப்படுத்தி வெற்றியடைய செய்தோம். நம்

Read More

குடியுரிமை திருத்தச் சட்டம் : அம்மாப்பட்டினத்திலும் தொடர் முழக்கப் போராட்டம்!!

Posted by - February 18, 2020

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும், இஸ்லாமிய இயக்க, கட்சிகளும் என அனைத்து தரப்பினரும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பொதுக் கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டை லால குன்டா பகுதியில் இந்த குடியுரிமை

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம்!!

Posted by - February 18, 2020

அதிரை லயன்ஸ் சங்கம் ஷிஃபா மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான கண் சிகிச்சை முகாம் அதிரை ஷிஃபா மருத்துவமனையில் நாளை (19.02.2020) புதன்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்நீர் அழுத்த நோய், கண்புரை போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சையளிக்கப்டுகிறது. மேலதிக தகவல்களுக்கு, ஷிஃபா மருத்துவமனை, 9952201631,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)