வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் இஸ்லாமியர்களுக்காக சமைக்கும் இந்து மக்கள் !

Posted by - February 17, 2020

சென்னையின் ஷாஹீன் பாக் எனப்படும் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்றும் 4வது நாளாக போராட்டமானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் போராட்டகளத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்காக ஹிந்துக்கள் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். இதன் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, இதுதான் தமிழ்நாடு என்றும், மதநல்லிணக்கத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More

NPRக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் – திமுக அறிவிப்பு !

Posted by - February 17, 2020

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், திமுக மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் சார்பில் “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரும் வகையில் “கையெழுத்து இயக்கம்” நடத்தி பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் நேற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக சார்பில், என்.பி.ஆருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற

Read More

அதிரையில் 43-வது நாளாக தொடரும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் போராட்டம் !(படங்கள்)

Posted by - February 17, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறகோரியும், NRC NPR ஐ அமல்படுத்தக்கூடாது என கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக இன்று 43வது நாளாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது CAA, NRC, NPR

Read More

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச்-3 தூக்கு – டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!

Posted by - February 17, 2020

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் பிறப்பிப்பு. ஏற்கனவே 2 முறை மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட் நிலையில், 3வது முறையாக மீண்டும் வாரண்ட் மார்ச் 3ந் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கில் ஏற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Read More

வண்ணாரப்பேட்டையில் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் !(படங்கள்)

Posted by - February 17, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பயங்கர தடியடி நடத்தியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தடியடி நடத்திய வண்ணாரப்பேட்டையில் அதே இடத்தில் தடையையும் மீறி தற்போது வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று போராட்டம் நடந்து வரும் வண்ணாரப்பேட்டை போராட்ட மேடையிலேயே திருமணம் ஒன்று நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த ஸஹீன் ஷா – சுமையா ஜோடிக்கு

Read More

CAA-விற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது – சபாநாயகர் தனபால் திட்டவட்ட அறிவிப்பு !

Posted by - February 17, 2020

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடிய சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கிடையாது என பேரவை தலைவர் தனபால் தெரிவித்துள்ளார். தமிழகமெங்கும் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் NRC, NPR சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் எனவும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் திமுக

Read More

தடை, தடியடியை மீறி தொடரும் வண்ணாரப்பேட்டை ஷாஹீன் பாக் !

Posted by - February 17, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இந்த தடியடி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் தடியடி நடத்திய வண்ணாரப்பேட்டையில் தடையையும் மீறி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தெற்கு டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக்கில் நடைபெற்று

Read More

திமுகவில் அதிக உறுப்பினர் சேர்த்ததற்காக MKS.ஹபீப் முகமதுவிற்கு பாராட்டு…!

Posted by - February 17, 2020

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர,பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் நேற்று(16.2.2020) மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் குறித்தும் இளைஞரணிகளின் செயல்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.இதில் புதியதாக அதிகமான உறுப்பினர்களை சேர்த்ததற்காக சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் MKS.ஹபீப் முகமதுவிற்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)