தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை !

Posted by - February 4, 2020

பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி பிப்ரவரி 5ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 22ஆம் தேதி பணி நாளாக செயல்படும்

Read More

மரண அறிவிப்பு ~ மு.செ.மு. முஹம்மது ஹனீஃபா அவர்கள்..!

Posted by - February 4, 2020

நடுத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு (ஹாஃபிஸ்) அபுல் ஹசன் அவர்களின் மகனாரும்.மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சேக்காதியார், மர்ஹூம் முஹம்மது சம்சுதீன் (லக்கி எலக்ட்ரிக்கல்)நூருல் அமீன், ஹாஃபிஸ் முஹம்மது அப்துல்லாஹ் இவர்களின் சகோதரரும்.மு.செ.மு.சபீர்( திருப்பூர்) அவர்களின் மாமனாரும்.மு.செ.மு.ஜஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய மு.செ.மு.முஹம்மது ஹனீபா அவர்கள் இன்று மதியம் நடுத் தெரு (5 வது சந்து) இல்லத்தில் காலமாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நாளை 05/02/2020 புதன் கிழமை காலை 7:00 மணியளவில் மரைக்காயர் பள்ளி அடக்கஸ்த்தலத்தில் நல்லடக்கம்

Read More

திமுக நடத்தும் குடியுரிமை மசோதவிற்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு அளித்திட ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கோரிக்கை…!

Posted by - February 4, 2020

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராய் மாபெரும் கையெழுத்து இயக்கம் பிப் 2 முதல் பிப் 8வரை பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர். இந்நிலையில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என பலதரப்பட்ட மக்களும் ஆதரவு அளித்து ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்திட ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் MKS.ஹபீப் முகமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

Posted by - February 4, 2020

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-2021 ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - February 4, 2020

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஜனவரி மாத மாதாந்திர கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 01.02.2020 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. பர்கத் தலைமை வகித்தார். உறுப்பினர் மௌலவி. P. அப்துல் காதர் ஆலிம் கிராஅத் ஓதினார். துணைச் செயலாளர் A.S. அகமது ஜலீல் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் O.K.M. சிபகத்துல்லா நன்றியுரை வாசித்தார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)