அதிரை SDPI கட்சி சார்பில் மின்வாரிய அதிகாரியிடம் கோரிக்கை மனு !

Posted by - July 16, 2019

SDPI கட்சி சார்பில் அதன் அதிரை நகர தலைவர் சாபிர் அஹமது இன்று அதிரை மின்வாரிய அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், அதிரை கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சமீபத்தில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டது. இது அங்கு பயிலும் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு உள்ள மின்மாற்றியை அகற்றி வேறொரு இடத்தில் வைக்க வேண்டும் என அம்மனுவில் கோரிக்கை

Read More

மரண அறிவிப்பு : சூப்பர் ஸ்டூடியோ அப்துல் ரஹ்மான் அவர்களின் தாயார் !

Posted by - July 16, 2019

மரண அறிவிப்பு : முத்துப்பேட்டை மர்ஹும் முஹைதீன் பக்கீர் அவர்களின் மனைவியும், அதிராம்பட்டினம் மெயின் ரோடு சூப்பர் ஸ்டூடியோ நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல் ரஹ்மான் அவர்களின் தாயாருமான சாச்சி என்கிற நபிஷா அம்மாள் அவர்கள் இன்று காலை காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் முத்துப்பேட்டை அரபு சாகிபு பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை….!

Posted by - July 16, 2019

காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தமிழக முன்னாள் முதல்வரும்,காங்கிரஸ் கட்சியின் முன்னோடியாக இருந்த கர்ம வீரர் காமராசரின் 117வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு,தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள காமராசர் சிலைக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சேதுபாவாசத்திரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Read More

அதிரையில் நாளை மின் தடை!!

Posted by - July 16, 2019

மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்திலிருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மதுக்கூர் துனை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையத்தின் மின் மாற்றிகளின் பராமரிப்பிற்காக மாதம் ஒருமுறை மின்தடை செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். அதன்ப்டி நாளை (17-7-2019) புதன்கிழமை அன்று காலை 9மணி முதல் மாலை 6 மணிவரை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே மின் சார்ந்த அத்தியாவசிய தேவைகளை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)