சட்டசபையில் பரிசுமழையில் நனைய வைக்கும் எடப்பாடி…!

Posted by - July 3, 2019

தமிழக சட்டசபை கடந்த மாதம் 28-ம் தேதி மீண்டும் கூடியது. அதன்பின்னர் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசினர்.

Read More

அதிரையில் வதந்தியை பரப்பியவருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை !!

Posted by - July 3, 2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவியது. அச்செய்தியில் அதிரையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும், அந்த பெண்ணின் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது போன்றவைகள் இடம்பெற்றிருந்தின. இதுகுறித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண்மணி, அதிரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், கடந்த மாதம் 23ம் தேதி முதல் சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி வருகிறது. அந்த வதந்தியில்,

Read More

உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் தொழில்நுட்பக் கோளாறு-பயனாளர்கள் கடும் அவதி !

Posted by - July 3, 2019

உலகம் முழுவதும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் படங்களை பார்க்க முடியாத பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிரக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ முடியாததால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். இதனை மையமாக வைத்து நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். ட்விட்டரிலும் தங்கள் பிரச்னை சுட்டிக்காட்டி ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர்.

Read More

அதிரை SSMG தொடர் : அரையிறுதிக்கு முன்னேறியது நாகூர் !

Posted by - July 3, 2019

அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர் அணியினரும் SSMG அதிராம்பட்டினம் அணியினரும் மோதினர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாகூர் அணி முதல் பாதியில் 2 கோல் அடித்து முன்னிலையில் ஆடியது. பின்னர் சுதாரித்து அதிரடியில் இறங்கிய SSMG

Read More

அதிராம்பட்டினத்தில் அரை கிலோமீட்டர் தூரம் உள்வாங்கிய கடல் !

Posted by - July 3, 2019

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். வழக்கம்போல இப்பகுதி மீனவர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வலைகள், தண்ணீர் கேன், உணவுகளுடன் மீன்பிடித் துறைமுகம் சென்றனர். அப்போது மீனவர்கள் தாங்கள் படகுகளை நிறுத்தி நங்கூரமிட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது.. வாய்க்கால் தண்ணீரில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் அனைத்தும் தண்ணீரின்றி தரைதட்டி நின்றது கண்டு

Read More

தமிழகத்தில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பாஜக அரசு அனுமதி !

Posted by - July 3, 2019

தமிழகத்தில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இரண்டாம் கட்ட ஏலத்தில் நாகப்பட்டினம் மாவட்டதின் 474 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 4 கிணறுகள் அமைப்பதற்கான அனுமதி இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக திறந்த வெளி அனுமதிக் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஹைட்ரோ கார்பன் வளங்களை, ஒரே உரிமத்தின் மூலம் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)