அதிரையில் நாளை மின்தடை !!

Posted by - June 14, 2019

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மதுக்கூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில் நாளை ஜூன் 15ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரியம் அறிவித்துள்ளது.

Read More

அதிரை SSMG கால்பந்து தொடரின் 10-ம் நாள் முடிவுகள் !

Posted by - June 14, 2019

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 14/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் SSMG அதிரை அணியினரும் NST நாட்டுச்சாலை அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் SSMG அதிரை அணி 5-2 என்ற கோல் கணக்கில் NST நாட்டுச்சாலை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய(15/06/2019) தினம்

Read More

காய்கறிகள், பழங்களின் விலை கடும் உயர்வு !

Posted by - June 14, 2019

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீட்டிலிருந்தபடியே பணி செய்யுமாறு பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் பல ஹோட்டல்கள் மூடப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் பலரும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடுமையான வறட்சியின் காரணமாக காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தரமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

இனி இந்தி, ஆங்கிலம் மட்டுமே.. தமிழில் பேசக்கூடாது.. தெற்கு ரயில்வேயின் அதிர்ச்சி உத்தரவு !

Posted by - June 14, 2019

அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அலுவல் விஷயமாக ரயில்வே அதிகாரிகள் யாரும் தமிழில் பேச கூடாது என்றும் தெற்கு ரயில்வே அதிகாரி சிவா என்பவர் நேற்று இரவு சுற்றறிக்கை அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் அருகே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு மொழி பிரச்னை தான் காரணம் என்பதால் இப்படி ஒரு உத்தரவை தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு பயணிகள்

Read More

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ கு. ராதாமணி காலமானார் !

Posted by - June 14, 2019

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ வாக கடந்த 2016 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த கு. ராதாமணி. சிறிது காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜிப்மர் மருத்துவமனையில் ராதாமணியின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67. ராதாமணியின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)