அதிரையில் நாளை சர்வதேச பிறை – பெருநாள் திடல் தொழுகை!

Posted by - June 3, 2019

  சவுதி உள்ளிட்ட நாடுகளில் தென்பட்டதால் நாளை காலை 7:15 மணியளவில் சர்வதேச பிறை அடிப்படையிலான பெருநாள் திடல் தொழுகை கிரானி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்படிக்கு, சர்வதேச பிறை கமிட்டி, அதிரை

Read More

அல் அமீன் பள்ளியில் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - June 3, 2019

அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் அதிராம்பட்டினத்தில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன. அதைப்போல் இந்த ஆண்டும் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பல்வேறு பள்ளிகளில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தினர். அதன் இறுதியாக இன்று திங்கட்கிழமை அதிரை பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள அல் அமீன் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி

Read More

கலைஞரின் 96-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய அதிரை திமுகவினர் !

Posted by - June 3, 2019

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டப்படப்பட்டது. அதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கருணாநிதியின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா படிப்பகம், சேர்மன்வாடி, வண்டிப்பேட்டை, பழஞ்செட்டித்தெரு உள்ளிட்ட பல இடங்களில் திமுகவின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஏனாதி பாலசுப்பிரமணியன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், நகர செயலாளர் இராம. குணசேகரன், துணை செயலாளர்

Read More

மரண அறிவிப்பு:- புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஆசியா சித்திகா.!!

Posted by - June 3, 2019

சே.ந.மு.ந.காவண்ணா மர்ஹும் நெய்னா முகம்மது அவர்களின் பேத்தியும், மர்ஹூம் நே.ந.மு.ந. காவண்ண அகமது தம்பி அவர்களின் பேத்தியும், N. பக்கர் சாஹிப் ஹாஜியார் அவர்களின் மகளும், ஜுபைர், ராஜிக், நிஜாமுதீன், ஹாரூன் இவர்களின் சகோதரியுமாகிய ஆசியா சித்திகா அம்மாள் அவர்கள் புதுமனைத் தெரு செக்கடி குளம் வடபுறம் வீட்டில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று 3.6.2019 மாலை 5 மணிக்கு தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம்

Read More

மருத்துவத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் !!

Posted by - June 3, 2019

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது மீராஷா வயது (42) இவருக்கு வயிற்று பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆரம்ப நிலை புற்றாக இருந்த காரணத்தினால் முழுவதுமாக நீங்கிய நிலையில் திடீரென கழுத்து பகுதியில் பரவியிருந்தது இதனை அடுத்து மேற்கண்ட மருத்துவமனியிலேயே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்ட இவருக்கு தொடர் சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இன்மையால் மிகவும் சிறமத்திற்கு உள்ளாகி வருகிறார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும், மனைவியும்

Read More

அதிரையில் நடைபெற்ற சமூதாய ஒற்றுமை சஹர் உணவு !

Posted by - June 3, 2019

அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்கார தெரு மஆதினுல் இஸ்லாமியா சங்கத்தில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் ரமலான் மாத இறுதி பத்தில் சஹர் உணவு அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கி வருகின்றனர் . அந்த வகையில் இவ்வாண்டு சமூக ஒற்றுமை சஹர் பந்தி இன்று அதிகாலை 2:30மணியளவில் தொடங்கியது, இதில் அனைத்து தெரு மக்களும் திறளாக கலந்துக்கொண்டு அறுசுவை உணவை சகனில் அமர்ந்துண்டு மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாட்டை அப்பகுதி இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Read More

அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் இஃப்தார் நிகழ்ச்சிற்கு அழைப்பு…

Posted by - June 3, 2019

அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப்பிள் ஒரு குழுமம் செயல்பட்டு ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் இதை போன்ற வாட்ஸ் ஆப்பிள் குழுமம் இயங்கி நிகழ்ச்சி நடத்துவது புதிதாக உள்ளது. இக்குழுமம் அட்மின்கள் குழுமத்தில் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அதிரை வாசிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த

Read More

சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்ட உலகின் முதல் பாலம் ! சந்திசிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை !

Posted by - June 3, 2019

உலக வரலாற்றிலேயே சிமெண்ட் இல்லாமல் பாலம் கட்டும் முதல் தொழில் நுட்பம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளதை இளைஞர்கள் வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர். புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் செவலூர் விலக்கு சாலை அருகே கட்டப்பட்டுள்ள புதிய சிறிய பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பாலத்தில் கால் வைக்க பாலத்தின் சிமெணெ்ட் பூச்சு உதிர்ந்து கொட்டியது. கை வைத்து பார்த்த இளைஞர்களுக்கு ஆச்சரயம். வெறும் மணலை மட்டுமே வைத்து பாலம் கட்டி அதில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)