அதிரையில் தடையை மீறி தொடர்ந்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள்… அதிரடி ஆய்வில் கட்டுக்கட்டாக சிக்கின…!

Posted by - May 13, 2019

அதிரையில் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை உத்தரவை மீறி தொடர்ந்து வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளும் தொடர்ச்சியாக அதிரையில் உள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமையும் அதிரையில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து பேரூராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெருமளவில் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. கிட்டத்தட்ட 17 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. மேலும்

Read More

மரண அறிவிப்பு : முகசெ. முஹம்மது இப்ராஹீம் அவர்கள் !

Posted by - May 13, 2019

மரண அறிவிப்பு : நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகசெ. முஹம்மது உமர் அவர்களின் மகனும், மர்ஹும் முகசெ. உதுமான் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாகுல் ஹமீது, அபுல் ஹசன், அபூபக்கர், மர்ஹூம் பஷிர் அகமது ஆகியோரின் சகோதரரும், முஹம்மது உமர், முஹம்மது ரபீஃக், ஹாஜா மொய்தீன், முஹம்மது புகாரி ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது இலியாஸ் அவர்களின் மாமனாருமாகிய முகசெ. முஹம்மது இப்ராகிம் அவர்கள் இன்று காலை வபாஃத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றிய மும்பை அணி !!(படங்கள்)

Posted by - May 13, 2019

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசனின் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் ஐபிஎல்-ன் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர். இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணிக்கு துவக்க ஆட்டகாரர்களாக ரோஹித்- டி காக் ஜோடி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய டி காக் 29 ரன்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)