நேரலையில் அதிரை தாரூத் தவ்ஹீதின் ரமலான் சிறப்பு சொற்பொழிவு !!

Posted by - May 6, 2019

அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மவ்லவி ஹுசைன் மன்பயீ அவர்களின் சொற்பொழிவு (பயான்) இன்று பிறை 1 முதல் பிறை 20 வரையிலும் நடைபெற உள்ளது. அதிரை தாரூத் தவ்ஹீதின் இந்த ரமலான் சிறப்பு சொற்பொழிவை ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ (Facebook) முகநூல் பக்கத்தில் நேரலையாக காணலாம். நேரலை இந்திய நேரம் இரவு சரியாக 10 மணிக்கு மேல்

Read More

மரண அறிவிப்பு : S.P. ஜமால் முகமது அவர்கள் !

Posted by - May 6, 2019

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.பி பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.பி அப்துல் மஜீது, எஸ்.பி அப்துல் வஹாப், எஸ்.பி தீன் முகமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜி எஸ்.எச் அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானும், கே. சேக்தாவூது அவர்களின் மாமனாரும், ஜெ. தமீம் அன்சாரி, ஜெ. பசுருதீன் ஆகியோரின் தகப்பானாருமாகிய S.P ஜமால் முகமது (வயது 68) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More

சாய்ந்த நிலையில் மின் கம்பம் !! செவி சாய்க்காத மின்வாரியம் !!

Posted by - May 6, 2019

அதிராம்பட்டினம் ரஹ்மானியா பள்ளிவாசல் அருகே உள்ள மின் கம்பம் கடந்த சில மாதங்களாகவே சாய்ந்த நிலையில் உள்ளன. இது குறித்து அக்கம் பக்கத்தினர் பல முறை புகார் அளித்தும் இம்மின் கம்பம் சரி செய்யப்படவில்லை. இதனிடையே அந்த மின் கம்பத்தில் அறுந்து விழும் நிலையில் உயர் அழுத்த மின் கம்பி உள்ளதை கவனித்த மக்கள் மீண்டும் மின் வாரியத்தை அனுகியுள்ளனர். புகாரின் பேரில் வந்த ஊழியர் இந்த மின் கம்பத்தின் நிலையை கண்டு ஏற மறுத்துவிட்டார். எந்நேரமும்

Read More

அதிரையில் தமுமுக நடத்திய மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி !!(படங்கள்)

Posted by - May 6, 2019

அதிரையில் தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய கைப்பந்து தொடர் போட்டி பெரிய ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது. இத்தொடர் போட்டியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர், பகல்/இரவு ஆட்டமாக நடைபெற்றது. முன்னதாக இத்தொடரில் சிறப்பு விருந்தினர்களாக பெரிய ஜுமுஆ பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் தெஹ்லான் மரைக்காயர், தமுமுக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, மாவட்ட செயலாளர் ஷேக் மொய்தீன்,

Read More

நீட் தேர்வு சோ(வே)தனைகள் !

Posted by - May 6, 2019

தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுதும் அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். கம்மல், ஹேர் க்ளிப், மூக்குத்தி, ஹை ஹீல்ஸ் காலணிகள் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாட்டுகளுடன் அனுமதிக்கப்பட்டதால் தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. முழுக்கை சட்டை அணிந்து வந்த

Read More

அதிரை பெண்மணியின் பர்ஸ் மிஸ்ஸிங்..!!

Posted by - May 6, 2019

சின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த பெண்மணியின் பர்ஸ் நேற்று (05/05/2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தவரவிட்டுள்ளார். நேற்று பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் பர்ஸை தவரவிட்டதாக அப்பெண்மணி கூறியுள்ளார். அதில் ஆதார் கார்டு, குழு அட்டை, வங்கி நகை கடன் ரசீது , 420 ரூபாய் பணம் ஆகியவை இருந்ததாக கூறியுள்ளார். அந்த பர்ஸினை யாரேனும் நேரில் கண்டால் உரியவரிடம் தொடர்புகொண்டு ஒப்படைக்கும்மாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது. தொடர்புக்கு:- +91 8760 007 589 +91 9551 070

Read More

சிங்கப்பூரிலிருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு பைக்கில் வந்த மூவர்!!

Posted by - May 6, 2019

சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை மற்ற நாட்டு மக்களுக்கு தெரியபடுத்துகின்ற வகையில் அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அந்த நாட்டை சேர்ந்த மூன்று பேர் அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் மூலம் சாலை மற்றும் கடல் மார்க்கமாக தஞ்சாவூருக்கு வந்தனர். சிங்கப்பூரைச் சேர்ந்த பாலச்சந்திரன், பன்னீர்செல்வம், அருணகிரி ஆகிய மூன்று பேர் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு அதிநவீன மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிங்கப்பூர் நாடு தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதனை மற்ற

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)