நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் !!

Posted by - April 17, 2019

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் தங்க மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. ஒவ்வொரு மூட்டையும், 25 கிலோவாக இருந்தன. ஓட்டுநரையும், அவருடன் இருந்த மற்றோருவரையும் விசாரித்ததில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என்றாலும்,

Read More

19ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்..!!

Posted by - April 17, 2019

கடந்த மாதம் நடந்து முடிந்த பிளஸ்2 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடந்தது. இதுவரை நடைமுறையில் இருந்து வந்த 1200 மதிப்பெண் என்ற முறையை மாற்றி 100 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் மேற்கண்ட தேர்வு நடந்தது. அதேபோல, மார்ச், ஜூன் மாதங்களில் நடந்த பிளஸ் 1 தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை

Read More

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

Posted by - April 17, 2019

தமிழ்நாட்டில் நாளை வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இவ்வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்புக்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெறும் தேர்தலில் நாம் செலுத்தும் வாக்கு வேறொருவருக்கு பதிவானால் என்ன செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட நபருக்கு வாக்கு செலுத்தும்போது அவருக்கு அந்த வரிசையில் பச்சை விளக்கு எரியாமல், இன்னொருவர் வரிசையில் இருக்கும் விளக்கு எரிந்தால், அந்த வாக்காளர் கையை எடுக்காமல் அந்த

Read More

அதிரையில் சாலை மறியல்??

Posted by - April 17, 2019

மதுக்கூர் மின் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு தடை செய்யப்பட்டது. 2 நாட்கள் தடை செய்யப்பட்ட மின்சாரம் நேற்று 11 மணியளவில் மீண்டும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. குறைந்தளவு மின்சாரமே விநியோகம் செய்யப்பட்டதால் அத்தியாவசிய தேவைகளான மோட்டார் தண்ணீர் போன்றவைகள் உபயோகப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் முறையாக கொடுக்கப்படவில்லை எனில் அதிரை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட

Read More

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து! தேர்தல் ஆணையம் அதிரடி!!

Posted by - April 17, 2019

வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், ஆம்பூர், குடியாத்தத்தில் இடைத்தேர்தல் அறிவித்தபடி நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள

Read More

அ.ம.மு.க. அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு!!

Posted by - April 17, 2019

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அ.ம.மு.க., அலுவலகத்தில் பணம் சிக்கிய அறைக்கு பாதுகாப்பளித்த போலீசார் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அ.ம.மு.க., சார்பில் தேனி லோக்சபா தொகுதியில் தங்கதமிழ்செல்வன், ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் ஜெயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆண்டிபட்டியில் கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. டி.எஸ்.பி.,சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்த வணிக வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மாடியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)