ஆட்சியைக் காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி-போட்டுடைத்த எம்பி அன்வர் ராஜா !

Posted by - February 23, 2019

முத்தலாக் சட்டத்தை லோக்சபாவில் கடுமையாக எதிர்த்து பேசியவர் ராமநாதபுரம் தொகுதியின், அதிமுக எம்.பி. அன்வர்ராஜா. இறைவனுக்கு எதிரான இந்த சட்டத்திற்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என பாஜகவிற்கு சாபம் கொடுத்தவர். ஆனால், இப்போது அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அன்வர் ராஜா அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. அதேநேரம், பாஜக-அதிமுக கூட்டணியை அன்வர்ராஜா நியாயப்படுத்தி பேச ஆரம்பித்துள்ளார். அதிமுகவினருடனான அவரது பேச்சு ஒன்று அதை நிரூபிப்பதாக உள்ளது. நிர்வாகிகள் மத்தியில் அன்வர் ராஜா உரையாற்றியபோது, இவ்வாறு நியாயப்படுத்தி

Read More

பெங்களூர் விமான கண்காட்சியில் பயங்கரம்..300 கார்கள் எரிந்து நாசம்…!

Posted by - February 23, 2019

பெங்களூர் எலஹங்கா பகுதியில், சர்வதேச விமான கண்காட்சி இன்றுடன் 4வது நாளாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளை சேர்ந்த முன்னணி விமானங்கள் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன. சாகசங்கள் செய்கின்றன. இதில் ரபேல் போர் விமானமும் கூட சாகசங்கள் செய்து காட்டியிருந்தது. இந்த கண்காட்சியை நேரில் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். வெளிநாட்டினரும் வந்துள்ளனர். இன்றும் அவ்வாறு மக்கள் வருகை தந்திருந்தனர். விமான கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு, வெளியே கேட் எண் 5 அருகே, நூற்றுக்கணக்கான கார்கள்

Read More

மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணி நிறுத்தம்…!

Posted by - February 23, 2019

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணிகள் மீனவ சங்கங்களின் போராட்டத்தால் நிறுத்தப்பட்டன. மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகம் அமைக்க 80 கோடி நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரண தொகைகள் வழங்கபடாத நிலையில் அண்மையில் கூடிய மாவட்ட மீனவர் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி துறைமுக கட்டுமான பணி நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் இன்று(பிப் 23) துறைமுக அதிகாரிகள் தமிழ்நாடு மீனவ பேரவை செயலாளர்

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 23, 2019

துளசியை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்களை பற்றி…   துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. 1 டம்ளர் பாலில்

Read More

சாலை விபத்தில் அதிமுக எம்.பி உயிரிழப்பு!

Posted by - February 23, 2019

திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி., ராஜேந்திரன் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், ஜக்காம்பட்டியில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக எம்.பி., ராஜேந்திரன், அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், ஓட்டுநர் செல்வம் ஆகியோர் கார் ஒன்றில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திண்டிவனம் – மயிலம் சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எம்.பி., ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்ச்செல்வன், ஓட்டுநர் செல்வம் ஆகியோர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)