தாமரையுடன் இணைகிறதா இலை ?

Posted by - February 18, 2019

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தேர்தல் குழு உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. சில கட்சிகளில் தொகுதி பங்கீடுகள் இன்னும் முடிவுக்கு வராததால் இழுபறி நீடித்து வருகிறது. இன்னும் சில கட்சிகளோ கூட்டணி குறித்தே இப்போதுதான்

Read More

முகமது ஷமி உதவிக்கரம்: சிஆர்பிஎப் நல அமைப்புக்கு நிதியுதவி..!!

Posted by - February 18, 2019

புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக ரூ.5 லட்சம் நிதியை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வழங்கியுள்ளார். புல்வாமா ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் இந்தக் கொடூர செயலுக்கு நாடுமுழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கவுதம் கம்பிர், வீரேந்திர சேவாக், முகமது கைப், ஷிகர் தவண் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். வீரமரணம்

Read More

சரியாக தேர்தல் நேரத்தில் தீவிரவாத தாக்குதலா ? சந்தேகம் வருகிறது…மமதா பானர்ஜி அதிரடி கேள்வி !

Posted by - February 18, 2019

சரியாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடந்திருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிர தாக்குதல் நடைபெற்றது. இந்த மிக கொடூரமான தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதல் காரணமாக நாடு முழுக்க பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,

Read More

மல்லிப்பட்டிணத்தில் ஓம்கார் ஃபவுண்டேஷன் அமைப்பினர் மீனவர்களுடன் கலந்துரையாடல்…!

Posted by - February 18, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் ஓம்கார் ஃபவுண்டேஷன் அமைப்பினர் மீனவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று (பிப் 18) நடைபெற்றது. தமிழ்நாடு விசைப்படகு மீனவ நலச்சங்க செயலாளர் AK.தாஜுதீன் தலைமை வகித்தார்.நாட்டுப்படகு சங்க தலைவர் SRK.ராஃபிக் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் கடல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி குறித்து,மீன்பிடி பொருட்களின் தரம்,மீனவர்களின் தேவைகள் குறித்தும் கலந்தரையாடல் நடைபெற்றது.இதில் 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துக்கொண்டனர்.

Read More

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது ~ உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

Posted by - February 18, 2019

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் தங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதனால் ஆலையை மூட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடுவதாக அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல்

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 18, 2019

பூண்டின் மருத்துவ குணங்கள். வெள்ளை பூண்டில் வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமனை குறைக்க உறுதுணை புரிகிறது(HDL = LDL ). வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது. அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)