தலைமைச் செயலக துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த எம்.பி.ஏ, எம்.டெக் பட்டதாரிகள் !

Posted by - February 5, 2019

இந்தியாவில், 2017-18-ம் ஆண்டில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் சமீபத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. இதை நிரூபிக்கும் விதமாக தமிழகத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணியாளருக்கு 14 இடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்தப் பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனச் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்தக் காலியிடங்களுக்கு இதுவரை நான்காயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Read More

அதிரையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!!

Posted by - February 5, 2019

கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களில் சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் புரட்டி போட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் சரியான முறையில் நிவாரணம் பொதுமக்களுக்கு வரவில்லை என்று அவ்வப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு அறிவித்த நிவாரணம் வழங்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கிழக்கு

Read More

அதிரையில் கார்,சுமோ,வேன் ஓடவில்லை…!

Posted by - February 5, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கார்,வேன்,சுமோ வாகனங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று(பிப் 5) ஈடுபட்டன. காவல்துறையினரின் தவறான அணுகுமுறையால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக என்று வீடியோவில் பதிவு செய்துவிட்டு சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்ற ஓட்டுனர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிரை பேருந்து நிலையத்தில் உள்ள கார்,வேன்,சுமோ ஓட்டுனர் நலசங்கத்தின் சார்பில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 5, 2019

எளிதாக கிடைக்கக் கூடிய புதினா கீரையில் உள்ள சத்துக்களும் பயன்களும்… புதினா இலையில் வைட்டமின் ‘பி’ சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும். புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும். புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர். புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)