அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் விளையாட்டு விழா !(படங்கள்)

Posted by - February 28, 2019

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 64-வது விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை(28.02.2019) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்லூரி செயலர் அபுல் ஹஸன் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விளையாட்டு விழாவில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பல்வேறு மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Read More

நாளை தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு ~ 8,61,107 பேர் எழுதுகின்றனர் !

Posted by - February 28, 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க உள்ளது. நாளை தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறும் 12ஆம் வகுப்பு தேர்வை 8,61,107 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு 150 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிகள் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க தேர்வு காலங்களில் காலை

Read More

அதிரை இளைஞர்கள் அமமுகவிற்கே வாக்களிக்க வேண்டும்- நகர ஐடிவிங் செயலாளர் கோரிக்கை !!

Posted by - February 28, 2019

அமமுகவிற்கு இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என அதிராம்பட்டினம் அமமுக தொழினுட்ப பிரிவு இணைச் செயலாளர் முஹம்மது ஜாவித் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த புரட்சிதலைவி அம்மா அவர்கள் இட்டுச்சென்ற பணிகளை சின்னமாவின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் செல்வர் TTV தினகரன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் அரசு அம்மாவின் கொள்கைக்கு மாற்றமாக பாஷிச பாஜகவின் அடிவருடியாக செயல்படுவதை நன்கறிவோம். அம்மாவின் கொள்கையை காற்றில் பறக்கவிட்ட இவர்களின் கொள்கை பிடிப்பு எவ்வாறு உள்ளது என

Read More

NGO க்கள் என்னும் நல்ல பாம்புகள்..!! எச்சரிக்கை..!!

Posted by - February 28, 2019

  தூத்துக்குடி மக்கள் எப்படி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுகிறார்களோ அதே போல், நாகை, காரைக்கால் மக்கள் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். அதனால், அப்பகுதியில் விவசாயம் அழிந்து மக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இந்த சூழலில் ONGC நிறுவனம் மக்களை ஏமாற்றி நன்மதிப்பை பெறுவதற்காக ஸ்டெர்லைட் பாணியில் சில சின்ன மீன்களை போட்டு பெரிய மீன்களை பிடிக்க (அதாவது சிறிய உதவிகளை செய்து பெரும் லாபம் அடைய) முன் வந்துள்ளது. இதனை பார்த்த மக்களும்

Read More

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் !

Posted by - February 27, 2019

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளாக மாவட்ட செயலாளராக : S.அப்துல் சலாம் த/பெ. K.சர்தார் NO.49/2 பட்டுக்கோட்டை சாலை பேராவூரணி – 614804 செல்:75022 55457. மாவட்ட பொருளாளராக : A.பைசல் அஹமது த/பெ.T.அபுல் ஹசன் No.காளியார் தெரு அதிராம்பட்டினம் – 614701 செல்:9629612527. மாவட்ட துணைச் செயலாளர்களாக : சாகுல் ஹமீது (ஸ்மார்ட்) தபெ.ஹிதாயத்துல்லாஹ் No.85 கடற்கரை தெரு அதிராம்பட்டினம்-614701 செல்:97507 51546. J.ஜுபைர் த/பெ.ஜெகபர்தீன் NO.3 பள்ளிவாசல் தெரு மதுக்கூர்

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஹம்மது மரியம் அவர்கள் !

Posted by - February 27, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சக்கரைத்தம்பி என்கின்ற அப்துல் லத்தீப் அவர்களின் மகளும், மர்ஹூம் மக்கள் என்கின்ற அபூபக்கர் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் முகம்மது சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், ஜஹாங்கீர், அப்துல் லத்தீப் ஆகியோரின் தாயாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை 6 மணியளவில் தரகர்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(27.02.2019) மக்ரிப் தொழுகைக்கு பிறகு தரகர்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம்

Read More

அமமுகவுடன் கை கோர்க்கிறதா SDPI??

Posted by - February 27, 2019

நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அதிமுக,திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டன.இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அமமுகவும் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து வருகிறது. ஏற்கனவே 38 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது.இந்நிலையில் தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு இடம் தரப்படும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் கூறினார்.மேலும் சில பொதுக்கூட்டங்களிலும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இந்த பேட்டிகள் எஸ்டிபிஐ கட்சியின் தலைமை

Read More

மரண அறிவிப்பு!! த.அ சேக்மதினா!! (வயது 55)

Posted by - February 27, 2019

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் த அ அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், த அ சேக் அலி, தமீம் இவர்களின் சகோதரரும், இஸ்மாயில் அவர்களின் மாமனாரும், ஜாபிர் அவர்களின் தகப்பானருமாகிய, த அ சேக்மதினா அவர்கள் சென்னையில் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் உடல் இன்று இஷா தொழுகைக்கு பின் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க இறைவனிடத்தில் பிரார்த்திப்போமாக..

Read More

ஓடும் ரயிலில் எம்எல்ஏ-விடமே ரூ. 1 லட்சத்தை திருடிய கொள்ளையர்கள் !

Posted by - February 26, 2019

சென்னை:ரயிலில் வந்த திமுக கொறடா சக்கரபாணியிடம் 1 லட்சம் ரூபாய், செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் விரைவு ரயிலில் ஒட்டன்சத்திரம் எம்எல்ஏவும், திமுக கொறடாவுமான சக்கரபாணி பயணித்தார். பயணத்தின் போது தன்னுடன் 1 லட்சம் ரூபாய், தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றை அவர் வைத்திருந்தார். ரயிலில் சக்கரபாணி அசந்து தூங்கியிருக்கிறார். பின்னர் தூக்கம் கலைந்து எழுந்து அவர் பார்த்த போது அவர் வைத்திருந்த பை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ந்தார்.

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி : முறிந்த நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றம் !

Posted by - February 26, 2019

அதிராம்பட்டினத்தில் கஜா புயலின் போது முழுமையாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்வாரியம் சார்பில் மாற்றி அமைக்கப்பட்டன. இந்நிலையில் அதிரை ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல் பகுதி முறிந்த நிலையில் மின்கம்பம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அவ்வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் சென்று வருவதாகவும், அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் அதனை அதிரை மின்வாரியம் சீரமைக்க வேண்டும் என நமது அதிரை எக்ஸ்பிரஸில் நேற்று (25.02.2019)

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)