உளுந்தூர்பேட்டையை உலுக்கிய TNTJவின் திருக்குர்ஆன் மாநாடு !

Posted by - January 28, 2019

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குர்ஆன் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா, பொதுச்செயலர் இ.முகம்மது, மேலாண்மை குழுத் தலைவர் எம்.எஸ்.சுலைமான், மேலாண்மைக் குழு உறுப்பினர் கே.எம்.அப்துல் நஸீர், மாநிலச் செயலர் ஆர்.அப்துல் கரீம், பேச்சாளர்கள் ஆர்.ரஹ்மத்துல்லா, எம்.ஐ.சுலைமான், கே.எஸ்.அப்துர் ரஹ்மான், மாநில பொருளாளர் கே.சித்திக் உள்பட பலர் மாநாட்டில் பேசினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : திருக்குர்ஆன் மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்டது. திருக்குர்ஆன்

Read More

திருச்சியை குலுக்கிய தப்லீக் இஜ்திமா… பல லட்சம் பேர் பங்கேற்பு…!

Posted by - January 28, 2019

திருச்சி இனாம்குளத்தூரில் தப்லீக் ஜமாத் சார்பில் மாபெரும் இஜ்திமா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த இஜ்திமாவில் பல்வேறு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தை கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவாக நிகழ்த்தினர். இஜ்திமாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. அவசர

Read More

எச்சரிக்கை : வங்கி லாக்கர் – யார் பொறுப்பு ?

Posted by - January 28, 2019

திருச்சி வங்கி லாக்கர்களில் கொள்ளை நடந்துள்ள நிலையில், வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள், பணத்துக்கு வங்கியின் பொறுப்பு என்ன என்பதைப் பார்க்கலாம். வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்கள், பணம் மற்றும் ஆவணத்துக்கும் வங்கிக்கும் உள்ள தொடர்பு குறித்து ரிசர்வ் வங்கி விதிமுறைகள் உள்ளன. அதன்படி, லாக்கரில் திருட்டு, கொள்ளை ஆகியவற்றின் மூலம் இழப்பு ஏற்பட்டால் வங்கி இழப்பீடு அளிக்காது. லாக்கருக்கான ஒப்பந்தத்தில் இதற்கான விதிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். வங்கி லாக்கரைப் பொருத்தவரை வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையேயான தொடர்பு,

Read More

மரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் !

Posted by - January 28, 2019

மரண அறிவிப்பு : மக்தூம் பள்ளி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், ஹபீப், ஹாமீம், அப்துல் ஹமீது, ஹாலித் ஆகியோரின் தாயாருமாகிய நபிஃஸா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

அதிரை அருகே காங்கிரஸ் கட்சியின் குடியரசு தின பொதுக்கூட்டம்…!

Posted by - January 28, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே மகிழங்கோட்டையில் நேற்று (ஜன 27) காங்கிரஸ் கட்சியின் குடியரசு தினவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.இக் கூட்டத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளர் கே.மகேந்திரன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பேராவூரணி சட்டமன்ற ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் மல்லிப்பட்டிணம் அ.நூருல் அமீன் கிராம பஞ்சாயத்துகள் குறித்து உரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)