திருவாரூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு !
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. திருவாரூர் தேர்தலுக்கான திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்று மாலை நடந்தது. சென்னை அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடந்தது. நேர்காணல் முடிவில் திமுக வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 நாட்களாக திமுக திருவாரூர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.