மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த உம்முல் ஹபீபா அவர்கள் !

Posted by - January 31, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் பஷீர் அகமது, மர்ஹூம் ராஜிக் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரின் சகோதரியும், முகமது ஹாலித், தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாரும், சேக் தாவூது, ஹாஜா நசுருதீன், அப்துல் பத்தாஹ், சாகுல் ஹமீது, நெய்னா முகமது ஆகியோரின் தாயாரும், பயாஸ் அகமது, பைசல் அகமது, பெரோஸ் கான், மன்சூர் அகமது, அசாருதீன் ஆகியோரின் மாமியுமாகிய உம்முல்

Read More

சீட்டுக்கட்டாக சரிந்த இந்திய அணியின் விக்கெட்டுகள்- 92 ரன்னுக்கு ஆல் அவுட் !

Posted by - January 31, 2019

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியது. விராட் கோலிக்கு பதிலாக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில்

Read More

தென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராது-டைம்ஸ் நவ் சர்வே !

Posted by - January 30, 2019

லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 36 இடங்களை திமுக – காங்கிரஸ் கூட்டணி வெல்லும். அதிமுக கூட்டணி 4 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற தென்னிந்திய மாநிலங்களின் நிலையும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு இருக்கிறது. #தெலுங்கானா டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்புபடி தெலுங்கானாவில் 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில்

Read More

   மாணவர்கள் போராட்டம் எதிரொலி : விதிமுறைகளை திருத்திய அண்ணா பல்கலைக்கழகம் !

Posted by - January 30, 2019

  இனி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தடுத்த செமஸ்டர்களில் அரியர் தேர்வெழுதலாம். மாணவர்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, அரியர் எழுத இருந்த கட்டுப்பாடுகளை தளத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். சென்னை, கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அளவில் பொறியியல் கல்லூரிகளை நிர்வகித்து வருகிறது. சில தனியார் பல்கலைக்கழகங்களைத் தவிர பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயிக்கும் விதிமுறைகளின் கீழ்தான் இயங்கி வருகின்றன. சமீபத்தில், மாணவர்கள் அரியர் எழுதுவதில் பல விதிமுறை மாற்றங்களை செய்தது அண்ணா பல்கலை.

Read More

மல்லிப்பட்டிணத்தில் திமுக கிராம சபா கூட்டம்…!

Posted by - January 29, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில்  திமுகவின் கிராம சபா கூட்டம் இன்று (ஜன 29) மாலை 5 மணியளவில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராம சபா கூட்டம் நடைபெற்று வருகிறது.பீனாமுனா நூர்தீன் தலைமையில் கூட்டம் நமைபெற்றது.முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்எஸ  பழனிமாணிக்கம் கலந்துகொண்டு கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் கஜாவில் பாதிக்கப்பட்ட பகுதியான மல்லிப்பட்டிணத்தில் அரசு நிவாரணம் மற்றும் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என்றும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கிடுவதில்லை

Read More

தேர்தலில் வென்றால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்… ராகுல் அதிரடி அறிவிப்பு !

Posted by - January 29, 2019

லோக்சபா தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சி புதிது புதிதாக நிறைய வாக்குறுதிகளை அளித்து தேர்தல் களத்தை சூடாக வைத்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று கேரளாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை மையமாக வைத்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ராகுல் காந்தி தனது பேச்சில், காங்கிரஸ் கட்சி ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் வென்றது. அங்கு நாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கி உள்ளோம். ஏற்கனவே

Read More

உளுந்தூர்பேட்டையை உலுக்கிய TNTJவின் திருக்குர்ஆன் மாநாடு !

Posted by - January 28, 2019

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குர்ஆன் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா, பொதுச்செயலர் இ.முகம்மது, மேலாண்மை குழுத் தலைவர் எம்.எஸ்.சுலைமான், மேலாண்மைக் குழு உறுப்பினர் கே.எம்.அப்துல் நஸீர், மாநிலச் செயலர் ஆர்.அப்துல் கரீம், பேச்சாளர்கள் ஆர்.ரஹ்மத்துல்லா, எம்.ஐ.சுலைமான், கே.எஸ்.அப்துர் ரஹ்மான், மாநில பொருளாளர் கே.சித்திக் உள்பட பலர் மாநாட்டில் பேசினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : திருக்குர்ஆன் மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்டது. திருக்குர்ஆன்

Read More

திருச்சியை குலுக்கிய தப்லீக் இஜ்திமா… பல லட்சம் பேர் பங்கேற்பு…!

Posted by - January 28, 2019

திருச்சி இனாம்குளத்தூரில் தப்லீக் ஜமாத் சார்பில் மாபெரும் இஜ்திமா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த இஜ்திமாவில் பல்வேறு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தை கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவாக நிகழ்த்தினர். இஜ்திமாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. அவசர

Read More

எச்சரிக்கை : வங்கி லாக்கர் – யார் பொறுப்பு ?

Posted by - January 28, 2019

திருச்சி வங்கி லாக்கர்களில் கொள்ளை நடந்துள்ள நிலையில், வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள், பணத்துக்கு வங்கியின் பொறுப்பு என்ன என்பதைப் பார்க்கலாம். வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்கள், பணம் மற்றும் ஆவணத்துக்கும் வங்கிக்கும் உள்ள தொடர்பு குறித்து ரிசர்வ் வங்கி விதிமுறைகள் உள்ளன. அதன்படி, லாக்கரில் திருட்டு, கொள்ளை ஆகியவற்றின் மூலம் இழப்பு ஏற்பட்டால் வங்கி இழப்பீடு அளிக்காது. லாக்கருக்கான ஒப்பந்தத்தில் இதற்கான விதிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். வங்கி லாக்கரைப் பொருத்தவரை வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையேயான தொடர்பு,

Read More

மரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் !

Posted by - January 28, 2019

மரண அறிவிப்பு : மக்தூம் பள்ளி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், ஹபீப், ஹாமீம், அப்துல் ஹமீது, ஹாலித் ஆகியோரின் தாயாருமாகிய நபிஃஸா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)