கஜா புயல் நிவாரணம் ரூ.1401 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்…

Posted by - December 3, 2018

  கஜா புயல் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியும், தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில்,  தமிழக  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட  நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  மீட்பு நடவடிக்கைகள் போர் கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு உதவி ஆட்சியர்

Read More

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்.. மோடிக்கு நெருக்கடி !

Posted by - December 3, 2018

குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற 22 போலி என்கவுண்டர் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. மூத்த பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸ் மற்றும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆகியோர் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் மனுதாரர்கள், வர்கீஸ் மற்றும் ஜாவித் அக்தர் ஆகிய இருவரும், இந்த மனுவை தாக்கல் செய்தனர். 2002 மற்றும் 2006ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத்தில் 22 போலி என்கவுண்டர்கள்

Read More

ஆத்திரத்தில் வெங்காயம் விற்ற காசை பிரதமருக்கு அனுப்பிய விவசாயி !

Posted by - December 3, 2018

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த விவசாயி சஞ்சய் சாதே, தான் விளைவித்த 750 கிலோ வெங்காயத்தை நிபாட் நகரில் உள்ள மொத்த விற்பனைச் சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு கிலோ வெங்காயம் 1.40 ரூபாய்க்கு மட்டுமே விலைபோயுள்ளது. மிகவும் ஆத்திரமுற்ற விவசாயி சஞ்சய் சாதே, வெங்காயம் விற்ற பணம் ரூபாய் 1,064 மொத்தத்தையும் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு மணி ஆர்டராக அனுப்பி வைத்தார். அப்படியாவது மத்திய அரசு தன்னைப்போல விவசாயிகளின் வேதனைகளைப் புரிந்துகொள்ளும் என

Read More

முத்துப்பேட்டையில் தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு !

Posted by - December 3, 2018

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று திங்கள்கிழமை தொழிலதிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். முத்துப்பேட்டை டி.டி.பி சாலையில் M.M.A டிரடேர்ஸ், M.M.A பில்டர்ஸ், M.M.A லாட்ஜ் ஆகிவற்றின் உரிமையாளர் திரு.ஜாலாலுதீன் ஆவார். நேற்று M.M.A லாட்ஜில் வாடகைக்கு முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த பிரசாந்த் த/பெ குமார் மற்றும் வசந்த் ஆகிய இருவரும் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் ரூம் காலி பண்ண வேண்டிய நேரம் வந்ததும் ரூம்மை காலிபண்ண மறுத்தும்,வாடகை கொடுக்காமலும்

Read More

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழக தென்னை உழவர் சங்கம் போராட்ட அறிவிப்பு…!

Posted by - December 3, 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு 5000 இழப்பீடு வழங்கவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 4.12.2018 அன்று காலை 9 மணிக்கு பட்டுக்கோட்டையில் தமிழக தென்னை உழவர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பிஆர் பாண்டியன் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். இப்போராட்டத்தில் திரளான மக்கள் பங்கெடுத்து கோரிக்கை வெற்றி பெற செய்திட வேண்டும் என்று ராஜிவ் காந்தி பஞ்சாய் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.நூருல் அமீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)