வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்கும் நாள் இன்று !

1235 0


அதிராம்பட்டினம் அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்காளர்கள் சரிபார்ப்பு முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது என்றும், இதில்.பெயர் விடுபட்டு இருந்தாலோ புகைப்பட மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு அதற்கான படிவத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என முன்னாள் 14வார்டு கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை இம்முகாம் மூலம் சரி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களது வாக்காளர் அட்டை தற்பொழுது நடைமுறையில் உள்ளதா என்று வீட்டிலேயே இருந்தபடி தெரிந்துகொள்வதற்கு எளிய வசதிகள் செய்துள்ளார்கள். உங்களது VOTER ID எண்ணினை __________________ 1950 என்ற எண்ணிற்கு SMS அனுப்பினால் உங்களுடைய VOTER IDல் உள்ள முழு தகவல்களும் நீங்கள் அனுப்பிய எண்ணிற்கு அனுப்பப்படும்.

இதேபோல் வெளியூர்களில் படிக்கும் இளைஞர்களும் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களும் இணையம் வழியாக சென்று புதிதாக இணைக்கும் வாக்காளர்கள். இணையத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

புதிதாக வாக்காளர் அட்டை பெற:- படிவம் 6 https://www.nvsp.in/Forms/Forms/form6
(பதிவு செய்த பிறகு உங்களுக்கு REFERENCE ID கொடுக்கப்பட்டிருக்கும் அதனை பதிவு செய்து வைத்து கொள்ளவும்)

வெளிநாட்டு வாழ் அதிரையர்கள் புதிதாக வாக்காளர் அட்டை பெற:- படிவம் 6A
https://www.nvsp.in/Forms/Forms/form6A

வாக்காளர் அட்டையினை திருத்தம் செய்ய:- படிவம் 8
https://www.nvsp.in/Forms/Forms/form8

பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர் அட்டை பயன்பாட்டு நிலையை கண்காணிக்க:-
https://www.nvsp.in/Forms/Forms/trackstatus

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: