பாசிச சங்பரிவாரங்களை வீழ்த்துவோம், எஸ்டிபிஐ மாநில தலைவர் மல்லிப்பட்டினத்தில் எழுச்சியுரை….!

1362 0


தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (செப் 10) மாலை 7 மணியளவில் ஜூம்ஆ பள்ளி எதிரில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் K.சேக் ஜலால் தலைமை தாங்கி அவர் கூறியதாவது, SDPI கட்சி மல்லிப்பட்டினம் உள்ளாட்சி தேர்தலில் ஐந்து இடத்தில் வெற்றி பெற்றதையும்,நாங்கள் எந்த லாபமுமின்றி சேவையாற்றினோம் என்றும் மகிழ்ந்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன் பேசும்போது,தேசத்தில் நடந்த மிகப்பெரிய ஒடுக்கப்பட்டோருடைய போராட்டங்கள் குறித்தும் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் போராட்டங்களை பற்றியும் விரிவாக எடுத்துரைத்து தற்போதைய தேவையான ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அடுத்து SDPI கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் பேசியதாவது, நாட்டை ஆளும் பாஜக அரசு இந்துக்களுக்கோ,கிறிஸ்தவ,முஸ்லீம்களுக்கு,தலித் என யாருக்கும் ஆதரவாக செயல்பட கூடிய கட்சி அல்ல மாறாக பார்ப்பனியத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சி,மேலும் சமஸ்கிருத மொழியை திணிப்பது பற்றியும் அதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்வது,நிலம் கையகப்படுத்தும் மசோதா மக்களின் உரிமைகளை பறிப்பதை பற்றியும் எடுத்துரைத்தார்.

மாநில தலைவர் SDPI நெல்லை முபாரக் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மல்லிப்பட்டினம் உள்ளாட்சி தேர்தல் சமயங்களில் இந்து,முஸ்லீம்களுக்கிடையே உள்ள புரிந்துணர்வு கொண்டு தேர்ந்தெடுக்கும் முறையை பாராட்டினார்,இந்த நல்லிணக்க ஒற்றுமை தொடர்ந்திட வேண்டும் என்றும் வாழ்த்தினார்.அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் முஸ்லீம்கள் நீக்கம் செய்யப்படுவதை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சிகள் பேசின என்றும்,அதற்குபிறகு அனைவரும் மறந்துவிட்டனர்.மோடியை வீழ்த்துவதல்ல நோக்கம் அவரை தாங்கி பிடிக்கும் சங்பரிவாரங்களை வீழ்த்திட வேண்டும் என்றார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.UAPA சட்டம் மூலம் முஸ்லீம்களை குறிவைத்து கைது செய்கின்றனர்,சிறைவாசிகள் விடுதலை,சாகர் மாலா திட்டத்தின் மூலம் அழிக்க முயல்கிறது என்று சாடினார்.மேலும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு பற்றி விளக்கி அழைத்து, உங்களுக்கு SDPI கட்சியின் செயல்வீரர்கள் பக்கப்பலமாக இருப்பார்கள் என்று கூறினார்.

SDPI மாநில செயலாளர் வழக்கறிஞர் N.சஃபியா நிஜாம்,கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் ரியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாபிச்சை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்து,தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர்,சமுதாய நலமன்ற அமைப்பின் நிர்வாகிகள் உமர் கத்தாப்,ஹசன் முகைதீன்,இப்றாகிம் ஆகியோர் கலந்து கொண்டு SDPI கட்சி தலைவர் மற்றும் மாநில செயலாளருக்கு சால்வை போர்த்தினர்.

விளக்கப் பொதுக்கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: