1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்களிடம் போராடி பெற்ற சுதந்திரத்தை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் நாடெங்கும் 72வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது.
அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக இவ்விழாவில் கலந்து கொண்டவர்களை M.F.முஹம்மது சலீம் வரவேற்றார்.
இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காதிர் முஹைதீன் கல்லூரி தாளாளர் அபுல் ஹசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இதன் பின்னர் நாட்டின் தேசிய கொடியை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர்
ஹாஜி.M.A. அபூபக்கர் அவர்கள் ஏற்றினார்.
இதனிடையே கடந்த மாதம் அதிரை ATM ல் கிடந்த ரொக்கத்தை முறையாக காவல்துறையிடம் ஒப்ப்டைத்த மாணவர்களுக்கு அவர்களின் நேர்மையை பாராட்டி சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
இறுதியா SISYA வின் தலைவர் அஹமது அனஸ் நன்றி கூறினார்.
Your reaction