அடிப்படை வசதிக்கேட்டு போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் !

1353 0


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள அரசினர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வியாழக்கிழமை(12.07.2018) காலை 8 மணியளவில் தொடங்கி இந்த போராட்டம் நடைபெற்றது. கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நடைபெற்ற இப்போராட்டம் காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணி வரை நடைப்பெற்றது. இதில் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியதாக தமிழ்நாடு புரட்சிகர மாணவ – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரியில் பயிலும் ஒரு மாணவி என ஐந்து பேரையும் கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: