முஸ்லிம்களின் மத வழிப்பாட்டு உரிமையில் கைவைக்கும் பீட்டாவை தடை செய்ய வேண்டும்..!!

1341 0


முஸ்லிம்களின் மத வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்புகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

இன்னும் ஓரிரு மாதங்களில் முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் வரவுள்ள நிலையில் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா ஆகியவை வழக்கம்போல் தங்களது மத துவேஷத்தை வெளிப்படுத்தியுள்ளன.

முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகையின் போது குர்பானி என்ற பெயரில் விலங்குகள் கொடூரமாக கொல்லப்படுவதாகவும் அதனால் தாங்கள் இதை கண்கானிக்கப் போவதாகவும் இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
இவ்விரு அமைப்புகளும் இவ்வாறு கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு பக்ரீத் பண்டிகைக் காலங்களில் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி பதட்டத்தை உண்டாக்குவதுதான் இவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

பக்ரீத் பண்டிகையின் போது விலங்குகள் கொடூரமாக கொல்லப்படுவதாகவும் கூறியுள்ளனர். இது முழுக்க முழுக்க அறிவியல் உண்மைக்கு மாற்றமான கருத்தாகும். நவீன அறிவியல் உலகம் விலங்குகளை கொல்லும் முறைகளை ஆய்வு செய்து இஸ்லாமிய முறைப்படி அறுப்பதுதான் சிறந்தது என முடிவுகள் தெரிவித்துள்ளன.

இஸ்லாம் காட்டும் முறைப்படி விலங்குகளை அறுக்கும்போது விலங்குகளுக்கு சிறு வலி கூட ஏற்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் இரத்தம் முழுவதும் விலங்கின் உடலிருந்து வெளியேறி தூய்மையான இறைச்சி கிடைக்கிறது. உண்மை இவ்வாறிருக்க இவற்றையெல்லாம் திட்டமிட்டு மறைத்து முஸ்லிம்களை கொடூரர்களாக சித்தரித்து வம்பிற்கு இழுக்கும் வேலையைச் செய்துள்ளனர்.

இதுபோன்ற மத துவேஷ அமைப்புகளுக்கு விலங்குகள் மீது உண்மையாகவே அக்கறை இருக்குமானால் கோசாலை என்ற பெயரில் விலங்குகள் பட்டினி கிடந்து சாவதையும், ஆங்காங்கே மிருகங்கள் தலையில் அடித்தும், கடித்தும் கொடூரமாகக் கொல்லப்படுவதையும் தடுத்த நிறுத்த முயற்சிக்கட்டும்.

பக்ரீத் பண்டிகையின்போது ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிட்டு தங்களது தியாக உணர்வை வெளிப்படுத்தும் இந்நிகழ்வானது, இஸ்லாமிய அழகிய வழிபாட்டு முறையில் ஒன்றாகும். இந்த வழிபாட்டு உரிமையை முஸ்லிம்கள் ஒருபோதும் யாருக்காகவும் விட்டுத் தரமாட்டார்கள்.

பக்ரீத் பண்டிகையின்போது முஸ்லிம்களை கண்காணிக்கப் போவதாக சொல்லி, மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

இத்தகையவர்கள், முஸ்லிம்கள் குர்பானிப் பிராணிகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது மாட்டுக் குண்டர்கள் எனும் சமூக விரோதிகளுடன் கை கோர்த்து முஸ்லிம்களைத் தாக்கி மதக் கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. வட மாநிலங்கள் போன்று ஏதாவது அசம்பாவிதத்திற்கு வித்திட்டால் தகுந்த முறையில் எதிர் கொள்ள முஸ்லிம்கள் தயாராகவே உள்ளனர்.

முஸ்லிம்கள், தங்களின் வழிபாட்டு உரிமைகளை எவருக்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். இதில், எவர் தலையிட்டாலும் அதைத் தக்க முறையில் எதிர்கொண்டு முறியடிக்கும் வலிமை முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கிறோம்.

எனவே, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து மத மோதல்களை தூண்டும் வகையில் செயல்படும் இதுபோன்ற அமைப்புகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும் தமிழக காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: