அதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சிறப்பான சமூக சேவையை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கடற்கரைத்தெருவில் மரங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகி வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மரங்களை அழித்ததால் ஏற்பட்டதன் விளைவு , இன்று மழையே இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.
இந்த நிலையில் தான் இன்று திங்கட்கிழமை[25.06.2018] கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் மழையை பெரும் பொருட்டிலும் கடற்கரைத்தெருவில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் சிறுவர்கள் , பெரியவர்கள் என அனைவரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு மரங்களை நட்டுச்சென்றனர்.
Your reaction