அனாதையை விரட்டாதீர்..!

1761 0


 

உலகில் வாழும் அனைத்தும் உயிர்களும் தன் வயிற்றின் பசியை தீர்க்க. தத்தமது வேலைகளை செய்து அடைந்துக்கொள்வார்கள்.

மனிதர்கள் பெரும்பாலும் கோரபசியிலிருந்தும் வறுமையிலிருந்தும் காத்துக்கொள்ள பொருளாதாரத்தை பெரிதாக சேமித்து வைத்துக்கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள். தன்னையும் தன் குடும்பத்தையும் அதிலிருந்து மீட்டுக்கொள்ள முயல்வார்கள். அதை ஒட்டியே வாழ்நாள்முழுவதும் வாழ்ந்து முடிப்பார்கள்.

ஒரு சிலருக்கு செல்வம் குமிந்துவிடும் ஒரு சிலருக்கு அச்செல்வம் எட்டியே பார்க்காது.
தலைவிதியே என நொந்துகொண்டு மீண்டும் மீண்டும் முந்திபார்க்கத்தான் செய்வார்கள்.. பொருளீட்டை அடைய உழைப்பார்கள்..

வாங்க கதை உள்ளே போவோம்…

பொதுவா பல இடங்களில் பல எண்ணங்கொண்ட மனிதர்கள் இருப்பார்கள் அப்புடி சுயநலம்கொண்ட ஒரு மனிதர் இருந்தார். அவர் பெயர் சந்திரன் அவர் அதி காலையிலே எழுந்து குளித்துவிட்டு தன் கடவுளை வணங்கிவிட்டுத்தான் தன் உணவு விடுதியில் வேலையை ஆரம்பிப்பார் எல்லா உணவுகளும் தயார் ஆன பிறகு.

முதல்உணவை காகத்திற்கு வைத்துவிட்டுத்தான் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வியாபார செய்வது வழக்கம்..

இந்த உணவு விடுதியால் ஏகப்பட்ட சொத்தும் வாங்கியும் வைத்திருந்தார். அவருக்கு ஒரு பையன் இருந்தான்.

பல வருடங்களாக குழந்தை இல்லாமல் கடைசியாக ஒரு ஆண் குழந்தையை ஆசிரமத்தில் தத்தெடுத்துக்கொண்டார்.

ஒருமுறை அவருடைய கடைக்கு ஏழு வயது கொண்ட ஒரு பையன் வந்தான். அவனை பார்க்கவே அழுக்கான தோற்றம். கிழிந்த ஆடை. பார்க்கவே பரிதாப நிலை இருந்தாலும்., அவன் ஒரு அநாதை பசியின் காரணமாக சந்திரனிடம் பசிக்கிறது ஏதாவது தாங்கன்னு சைகையால் கேட்டான்.

அதெல்லாம் ஒன்னும்கிடையாது போ என விரட்டினார். அவன் போக மறுத்தான்.எதிரே ஒரு வயதான முதியவர் இதை கவனித்துக்கொண்டு இருந்தார்.. இவர் தினமும் இக்கடைக்கு வந்து போகக்கூடியவர்

அவன் நின்றுக்கொண்டே இருந்தான் கோவத்தில் தொலைந்துபோ இங்கே நிக்காதே பார்க்கவே அறுவருப்பா இருக்கு என சொல்லிகொண்டே விரட்டி அடித்தார்.

இதைப்பார்த்துகொண்டு இருந்த முதியவர் சொன்னார். ஏம்ப்பா அவன் பசிக்குத்தானே கேட்குறான் கொஞ்சம் கொடுத்து அனுப்பலாமே என்றார்.

நீங்கவேறெ எவலாவது பெத்து இங்கே அனுப்பி என் தாலியருப்பாளுங்க. ஒரு தடவை கொடுத்துட்டா இதை பழக்கமாக வைத்துக்கொண்டு தினமும் வந்து நிக்கும் சனியன்கள் என கோவத்துடன் கடிந்துக்கொண்டார்..

அச்சிறுவன் அழுதுக்கொண்டே அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான் கொஞ்சம் தூரம் சென்றதும் ஒரு வீட்டின் அருகே கொஞ்சம் உணவு சிதறிக்கடந்ததை கண்டு அதை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

அவ்வீட்டின் உள்ளே ஒன்றரை வயது குழந்தை அழுகை சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான்.

இங்கே உணவு விடுதியில் பெரியவர் சந்திரனிடம் சொன்னார்..

ஏன்ப்பா தினமும் கடவுளை வணங்குரே. காக்கைக்கு உணவு கொடுக்குறே. பசிக்கு சிறுவன் உணவு கேட்டதும் எட்டி உதைஞ்சிட்டியே இது பாவமில்லையா. உனக்கு குழந்தை இல்லாமல் உன் மனைவி கோவிலை தினமும் சுற்றிவந்தால்.,

அக்கோவிலை ஒரு முறை சுற்றிவரும்பொழுது தேம்பி தேம்பி உன் மனைவி குழந்தையை கடவுளிடம் கேட்டுக்கொண்டிருந்ததை கவனித்த ஒரு பையன். தான் சுமந்துவந்த தன் தம்பியை உன் மனைவியின் மடியில் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.. இதை நான் எதிரே நின்று கவனித்துக்கொண்டு இருந்தேன்.

நான்தான் உன் மனைவிடம் சொன்னேன் கடவுள் உனக்காக தந்த குழந்தை எடுத்துக்கிட்டு போ என்றேன்..

தெய்வமும் குழந்தையும் ஒன்னு அதான் குழந்தை வடிவத்துலெ தெய்வம் வந்து இருக்காறு என கூறினேன். அதை உன் மனைவியும் ஏற்றுக்கொண்டால்.

அந்த பையன் உன் மனைவி அழுவதை பார்த்து சகிக்காமல் அந்த நொடி இரக்கப்பட்டான். அந்த பையனைத்தான் நீ அடிச்சு விரட்டிருக்கே சந்திரா.

சந்திரன் கண் கலங்கினார். இருவரும் சேர்ந்து அப்பையனை வீதியில் தேட ஆரம்பித்தார்கள்..

கடைசியில் தன் வீட்டின் அருகில் வரும்பொழுது மக்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். அவர்கள் அப்பையனை குழந்தையை திருடவந்தவன் என நினைத்து அடித்து விசாரித்ததில் மயக்கமுற்று கிடந்தான்.
எவ்வளவு கேட்டும் வாயை திறக்கமாட்டேங்குறேன் அதான் அடித்தோம் என்று அங்கே கூடி நின்றவர்கள் சொன்னார்கள்.

சந்திரனும் பெரியவரும் எல்லோரையும் விரட்டிவிட்டு அப்பையனை தன் வீட்டிற்குள் அழைத்து அரவணைத்துக்கொண்டார்.

சந்திரனின் மனைவி கேட்டாள் இவனை என்னெ செய்யபோகிறீர். என்றதும்.

நீ கொண்டுவந்த குழந்தை இந்த பையன் தந்தது.வாய் பேச முடியாத இந்த பையனை கடவுள் எனக்கு தந்தாருன்னு பெருமிதத்தோடு சொன்னாராம்.

அதன் பிறகு அநாதைகளுக்கு உணவு இலவசம் என தன் கடையில் எழுதிவைத்து சேவை புரிந்து வந்தார் சந்திரன்..

முற்றும்.

அநாதைகள் மீது இரக்கம்கொள்வோம்.
பசியுடையோருக்கு உணவளிப்போம்.
ஜியாவுதீன்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: