இன்று உலக சுற்றுச்சூழல் தினம் : நாம் அறிய வேண்டிய அரிய தகவல்கள் !

1472 0


ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழல் குறித்து நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களை பார்ப்போம்.

இயற்கையும் சுற்றுச்சூழலும் நம் தேவைகளுக்கு அனைத்தையும் வைத்திருக்கின்றன. ஆனால், நம் பேராசையால் அவற்றை அழிக்கிறோம். இருப்பதையும் நாசம் செய்யும் வேலையைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்று உலக சுற்றுச்சூழல் தினம். சுற்றுச்சூழலைப் பற்றி சில தகவல்கள்:

ஒவ்வோர் ஆண்டும் கடலில் கொட்டப்படும் எண்ணெயின் அளவு 5 மில்லியன் டன்.

ஒரு கண்ணாடி பாட்டில் மக்குவதற்கு 4,000 ஆண்டுகள் ஆகின்றன. பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 450 ஆண்டுகள்.

ஒவ்வொரு நொடியும் 100 ஏக்கர் மழைக் காடுகள் வெட்டப்படுகின்றன.

நாம் பயன்படுத்தி வெளியில் தூக்கிவீசும் பிளாஸ்டிக் குப்பைகள், ஆண்டுதோறும் ஒரு மில்லியன் கடல் வாழ் உயிரிகளைக் கொல்கிறது.

உலகம் முழுவதிலும் காடுகளில் உள்ள 50,000 உயிரினங்கள் (Species) ஒவ்வோர் ஆண்டும் அழிகின்றன. அதாவது, ஒரு நாளைக்குக் குறைந்தது 137 இனம்.

உலகத்திலேயே மிகவும் பழைமையான மரங்களின் வயது 4,600 ஆண்டுகள்.

மாசுபாடுதான் நமது மிகப் பெரிய சவால். இது ஒரு வருடத்துக்கு 100 மில்லியன் மக்களைப் பாதிக்கிறது.

இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலுள்ள 40% குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டுக்குச் சுத்தமில்லாத தண்ணீரும் உணவுப் பற்றாக்குறையும்தான் காரணம்.

நாம் வாங்கும் பண்டங்களை உறையிலிடுவதற்கான பொருள்கள் (Packaging materials) குப்பைகளில் 35 சதவிகிதத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

உலகத்திலுள்ள நீரின் அளவு மாறுபட்டதே கிடையாது. அனைத்தும் தண்ணீர் சுழற்சியில் சீராகிறது. மக்கள்தொகைப் பெருக்கம்தான் நீர்ப் பற்றாக்குறைக்கான காரணம்.

இனியாவது சிந்தித்துச் செயல்படுவோம் ! சுற்றுச்சூழலை பாதுகாப்போம் !

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: