உன்னை நீ நம்பு…!! வாழ்க்கையில் வெற்றி பெறலாம்..!!

1966 0


ஒரு நாட்டில் ஓர் ராஜா.

இந்த கதை நம்ம கற்பனைதான். நம்பிக்கை இலக்கணம் வேண்டி.

ராஜாவுக்கு 7 ஆண் குழந்தைகள் அந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் படிக்கவில்லை ராஜா எவ்வளவோ முயன்றும். அந்த மகனை நினைத்தபடி வளர்க்க முடியவில்லை. அதனால் அந்த பையன் மீது மட்டும் வெறுப்பாக நடந்துக்கொண்டார்.

ஆறு பிள்ளைகளையும் கல்வி அறிவுகொண்ட மா மேதைகளாக பார்த்தார்.

ஒரு முறை ராஜாவின் அரண்மனையில் வைரம் ஒன்று திருட்டு போய்விட்டது. அவ்வைரத்தை ராஜா மிகவும் விரும்பிய பொருளில் அதுவும் ஒன்று.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தன் படிக்காத பையன் மீது சந்தேகம் இருந்தது. ஆனாலும் அதை பையனிடம் கேட்டு பெரிதுபடுத்த விரும்பவில்லை.

ஒரு தடவை வீர விளையாட்டு சோதனைப்போட்டி நடந்தது.

அப்போட்டியில் வழக்கம்போல் ராஜா பரிசுகளை வாரி வழங்க முன் வந்தார்.

முதன்மை மூன்று போட்டிகள் வைக்கப்பட்டன.

1. சிங்கத்தை அடக்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டும்.

2. நான்கு சிப்பாய்களை அடித்து வீழ்த்தவேண்டும்.

3. அரண்மனையில் திருட்டுப்போன வைரத்தை கண்டறிந்து தரவேண்டும்.

இப்போட்டியில் யார் வெற்றி பெருவார்களோ. அவர்கள் விரும்புவதை நான் தருவேன் என்றார்.

இது பொதுமக்களுக்கு மட்டும் கொடுத்த அறிவிப்பு.

ஊரில் ஒரு சிலரே போட்டியில் பங்கெடுத்தார்கள். அதில் அனைவருமே முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவினார்கள். ஒரு வீரன் மட்டும் முதல் இரண்டு போட்டிகளில் வென்றான்.

மூன்றாவது போட்டியான வைரத்தை தேடும்போட்டிக்கு மூன்று நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

அரண்மனை முழுவதும் தேட முன்வந்தான் அந்த இளைஞன். அதற்கான உதவியை ராஜாவின் இளைய மகன் படிக்காதவனின் உதவி கேட்டு நின்றான்.

ராஜாவின் பையன் அவ்வீரனிடம். நீங்கள் எவ்வாறு இரண்டு போட்டிகளில் வெற்றி அடைந்தீர்கள்.

அவன் கர்வமாக சொன்னான். என் வீரத்தால்தான். அந்த வீரத்தை வைத்துக்கொண்டு வைரத்தை தேடுங்களேன் என்றான்.

வீரன் சொன்னான் அதெப்புடி முடியும்.

நீங்கள் போட்டியில் வென்றது வீரத்தால் அல்ல நம்பிக்கையினால். அதுபோன்று அதே நம்பிக்கையில் தேடுங்கள் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

மூன்று நாள் கால அவகாசம் முடிந்து மன்னர் முன் மக்கள் திரளாக கூடினார்கள்.

மன்னர் வீரனிடம் கேட்டார் எங்கே வைரம் கண்டுபிடித்தீர்களா.

ஆம் கண்டுபிடித்தேன். அந்த வைரம் உங்கள் இளைய மகன்தான்.

என்ன உளறுகிறாய்.

மன்னா நான் உளரவில்லை நடந்ததை சொல்லிக்காட்டினான். நான் ஒரு கர்வம்கொண்டவனாக திரிந்தேன். அது தவறு என உணர வைத்து. நம்பிக்கையே சிறந்த பலம் என்பதை நிரூபித்த என் கண்களுக்கு தொலைந்துவிட்ட வைரத்தைவிட உங்கள் மகனே எனக்கு மிகப்பெரும் பொக்கிஷமாக தெறிவதாக கூறினான்.

நீங்களும் தொலைந்துவிட்ட வைரத்தை நம்பிக்கையோடு தேடுங்கள் கிடைக்கும் என்றான்.

இக்கூற்றை பல்வேறு மக்களும் மந்திரிகளும் ஏற்றுக்கொண்டதால் ராஜாவும் ஏற்றுக்கொண்டு. சரி உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார்.

மன்னா உங்களுக்கு பிறகு உங்கள் இளைய மகனே இந்நாட்டை ஆள வேண்டும் என ஆசை கொள்கிறேன் என்றான்.

அதற்கான முடிசூடும் நாள் இதுவாகவே இருக்கவேண்டும் என சொன்னதும்.

ராஜா தன் இளைய மகனை பாராட்டி. முடி சூட்டினான்.

ராஜாவின் இளைய மகனும் நம்பி இருந்தான் தான்தான் இந்நாட்டை ஆள்வோம் என்று. அதன்படியே நடந்தது.

முற்றும்.

நம்பிக்கை என்பது பொய்த்து போவது அல்ல.
அதனால் நம்பிக்கை கொள்ளுங்கள் அதுவே சிறந்த வாழக்கை.

ஜியாவுதீன்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: