பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை துவங்கவும்,அதிரையிலிருந்து சென்னைக்கு வழித்தடம் அமைத்து தர வேண்டுகோள்..!!

2109 0


பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் (29.04.2018) இன்று ஞாயிற்றுக்கிழமை 5.00 மணியளவில் பட்டுக்கோட்டை ஹைஸ்கூல் ரோடு நிலா ஸ்கூலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் கே.லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் ஜே.பிரின்ஸ் விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.செயலாளர் வ. விவேகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பி. சுந்தரராஜூலு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்களின் வரிப்பணத்தில், பல கோடிக்கான ரூபாய் செலவில் 73 கி. மீட்டர் நீளம் கொண்ட அகல ரயில் பாதை காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 30 ந்தேதி ஒருநாள் மட்டும் பயண சீட்டு வழங்கப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கும், மீண்டும் பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கும் இயக்கப்பட்டது. தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இப்பாதையில் இரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே ரயில்வே நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி பகுதியில் இருந்து தினமும் சென்னைக்கு சுமார் 100 பேருந்துகள் வரை செல்கிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், வியாபாரிகள் நலன் கருதியும், ரயில்வே துறைக்கு வரும்வருமானத்தை கணக்கில் கொண்டும் பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, அரியலூர், வழியாக சென்னைக்கு விரைவு இர‌யி‌ல் விட வேண்டும். ரயில்கள் இயங்காத காரணத்தால் ரயில்நிலையங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறவும், ரயில்வே சொத்துகளுக்குசேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பட்டுக்கோட்டை திருவாரூர் அகலரயில்பாதை அமைக்கும் பணிகள்நடைபெற்று வருகிறது. இப்பணியினை துரிதமாக முடித்து சென்னைக்கு இரயில் வசதி செய்து தர வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை ரயில்வே துறை நிறைவேற்ற பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், விவசாயிகள், மீனவர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஒத்துழைப்புடன் ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு ஆயிரக்கணக்கான அஞ்சல்அட்டைகள் மூலம் கோரிக்கைகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை, மன்னார்குடி – பட்டுக்கோட்டை புதிய அகல ரயில்பாதைஅமைக்கும் பணிக்கான நில ஆர்ஜிதப்பணிகளை விரைவில் முடித்து, இப்பாதைகளில் விரைவில் இரயில் பாதை அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக செயற்குழு உறுப்பினர் டி. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: