Friday, April 19, 2024

தண்ணீரை வீண்விரயம் செய்யாதீர்..!!அஹமது ஜிஃப்ரியின் சிறு கதை..!!

Share post:

Date:

- Advertisement -

 

ஓர் ஊரில் லிங்கேஸ்வரன் என்ற ஒரு அரசன் இருந்தான் அவன் எல்லா வற்றையும் தாராளமாக செலவு செய்வான்.அதிகமாக வீண்விரையம் செய்வான்.ஒரு நாள் அதிகாலையில் அவனுடைய அரண்மனையை சுற்றி நடந்து சென்று கொண்டிருந்தான் அப்பொழுது அங்கே தோட்டக்காரன் செடிக்கு விட்ட தண்ணீர் வீணாக தரையில் ஓடிக்கொண்டிருந்தது.தோட்டக்காரன் எங்கோ சென்றுவிட்டான்.அப்பொழுது அவ்வழியாக வந்த அரசர் தண்ணீர் வீணாவதை கண்டும் காணாதது போல் சென்றார் அங்கே இருந்த முதியவர் ஒருவர் அரசரிடம் ‘அரசரே தண்ணீர் எல்லாம் வீணாக தரையில் ஓடுகின்றதே அதனை எடுத்து செடிகளுக்கு விடுங்களேன் என்னால் குனிந்து அதனை எடுக்க முடியவில்லை அதனால்தான் உங்களிடம் சொல்கிறேன்’ என்றார் முதியவர் அதற்கு அரசர் கூறினார் ‘பரவாயில்லை இங்கே மட்டுமா வினாகிக்கொண்டு இருக்கின்றது. அங்கே கடலில் எவ்வளவு நீர் வீணாக கிடக்கின்றது’ என்று ஆனவமாக பேசினான் அரசன்.

ஒரு நாள் அரசன் வேட்டையாடுவதற்காக அவன் மட்டும் காட்டுக்குள்ளே சென்றான் அங்கே அவன் அவன் வழி தவறி வேறெங்கோ சென்றுவிட்டான் அப்பொழுது திடீரென்று ஒரு புதருக்குள் விழுந்து விடுகிறான். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிடுகிறான். ஆனால் அவ்வழியாக யாரும் வரவில்லை. வெகு நேரம் அதற்குள்ளேயே இருக்கின்றான். அங்கே அவனுக்கு தாகம் ஏற்படுகின்றது அவனால் தாகம் அதிக மாகிறது. அப்பொழுது அந்த காட்டுக்குள் மழை பொழிகிறது அவனுக்கு மேல் மரம் இருந்தால் இவன் மேல் மட்டும் தண்ணீர் விளவில்லை. இப்போது தான் அவன் உணர்கிறான் கடல் அளவு தண்ணீர் இருந்தாலும் அதை வீண்விரயம் செய்யக்கூடாது என்று……

பிறகு அந்த புதருக்குள் விழுந்த அவனை அந்த பக்கம் வந்த ஒருவர் காப்பாற்றி அவனுக்கு தண்ணீர் கொடுத்தார். அவருக்கு நன்றி கூறிவிட்டு அந்த அரசர் காட்டைவிட்டு வெளியேறினார். ஊருக்குள் வந்தவுடன் முதலில் அந்த முதியவரை சந்திக்கச்சென்றார். அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். வந்தவுடன் முதலில் தண்ணீரை வீண்விரையம் செய்யக்கூடாது என்ற திட்டத்தை அமல்படுத்தினார்.

பிறகு அடுத்த நாள் அரண்மனையை சுற்றி நடந்து கொண்டிருந்தார் அப்பொழுது அதேபோல் தோட்டக்காரன் செடிகளுக்கு விட்ட தண்ணீர் வீணாக தரையில் ஓடியது அதனை கண்ட அரசர் அந்த குழாயை செடிகளின் பக்கம் நகர்த்தி வைத்துவிட்டு அந்த தோட்டக்காரனை அழைத்து அறிவுரை கூறினார். இதனை கண்ட அந்த முதியவர் அரசரை வாழ்த்தினார்..

ஆக்கம்: மாணவ செய்தியாளர் அஹமது ஜிஃப்ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...