எக்ஸ்பிரஸ் மருத்துவம் : பலாபழத்தின் நன்மைகள் !

1758 0


பலாப்பழத்தில் மருத்துவ பயன்கள் மிகுந்து இருக்கின்றது. வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் ஏற்படாது.

இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும்.

முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படும் பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும் கண்ணை கவரும் வண்ணத்திலும் இருக்கும்.

பலாப்பழம் சுவையில் மட்டுமல்ல… அதில் அடங்கியுள்ள மருத்துவ குணத்திலும் டாப் தான். இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்போது பார்ப்போமா….

பலாப்பழத்தின் இனிப்புச் சுவைக்குக் காரணம், இதில் உள்ள ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் தான். பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.

மனித இயக்கத்திற்கு உதவும் தைராய்டு ஹார்மோன் உடலில் உற்பத்தியாகவும், அதை உட்கிரகிக்கவும் தாமிரச் சத்து அவசியம். பலாவிலுள்ள தாமிரச்சத்து இதற்கு உதவி செய்கிறது.

பலாபழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.

வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.

பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோர் பலாபழமரத்தின் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.

பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என்கிறது ஒரு ஆய்வு.

நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலும் ஊட்டம் பெறும்.

பலாப்பழத்திலுள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது தவிர, உடல் இளமை தோற்றத்தை பெற உதவுகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: