தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 50ஆண்டுகளுக்கு மேலாக அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த இஸ்லாமிய அரபி கல்லூரியில் வருடம் தோறும் பல மவ்லவி மற்றும் ஆலிம்கள் பட்டம் பெறுகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா போன்ற பகுதியை சேர்ந்த மாணவர்களும் இஸ்லாமிய மார்க்க கல்வி கற்கும் இடமாக திகழ்கிறது.
இந்நிலையில்,
இந்த மதரஸாவின்
“மவ்லவி மற்றும் ஆலிம்” பட்டமளிப்பு விழா வருகிற (26/04/2018) வியாழக்கிழமை காலை 6 மணியளவில் துவங்கி நடைபெற உள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில் உலமாக்கள் பலர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.
இவ்விழாவில், அதிரை
மற்றும் அனைத்து ஊர்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெருந்திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு அல் மதரஸதுர் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி அழைப்பு விடுத்துள்ளது.
Your reaction