காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதனை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும், சாலை மறியல்களும் அரங்கேறி வருகிறது . இதற்கு தமிழக அரசியல் கட்சியினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்க பொதுச் செயலாளா் செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிக்கையில், “மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் முழுவதும் மருந்து விற்பனையகங்கள் மூடப்பட்டிருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றை தினம் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your reaction