மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! உச்சகட்ட பரபரப்பில் தமிழகம் ..!!

1629 0


காவிரி வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் நாளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு நேற்றே முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக அரசும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நேற்று நடை பெற்றது நடைபெற்றது.

 
 

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த அலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதையடுத்து, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசித்ததாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில் காவிரி வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் நாளை காலை 10 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக முதல் எடப்பாடி அரசு கூறியுள்ளது. இதனால் உச்சகட்ட பரபரப்பில் தமிழகம் உள்ளது.

3 அதிமுக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய விருப்பம் –
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தற்கொலை செய்து கொள்ளவும் தயார் என்று மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் அவையில் புதன்கிழமை பேசும் போது கருத்துத் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக மக்களவை உறுப்பினர்கள் அருண்மொழித்தேவன் (கடலூர்) , கோ.அரி (அரக்கோணம்), ப.குமார் (திருச்சி) ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தங்களது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய விருப்பம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, கட்சித் தலைமையிடம் தங்களது விருப்பத்தை அவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில எம்.பி.க்களிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினர் வியாழக்கிழமை பேசியதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Source:- Zee_News|தமிழன் எக்ஸ்பிரஸ்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: