“எக்ஸ்பிரஸ் சமையல்” மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா எப்படி செய்வது.!!

1940 0


“எக்ஸ்பிரஸ் சமையல்” மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா எப்படி செய்வது.!!

தேவையான பொருட்கள் :

பிரட் துண்டுகள் – 10,
வெங்காயம் – 2,
இஞ்சித் – சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
அரிசி மாவு –  4 டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
முந்திரிப்பருப்பு – 10 (உடைத்துக் கொள்ளவும்),
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு கைப்பிடி,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

* இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

* பிரட்டை பொடித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பொடித்த பிரட், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா ரெடி.

* தக்காளி சாஸிடன் பரிமாறவும்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: