​ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு போட்டியாக களமிறக்கப்படும் புதிய அமெரிக்க நிறுவன பைக்..!!

1828 0


அமெரிக்காவைச் சேர்ந்த ‘UM’ எனப்படும் யுனைட்டட் மோட்டாட்சைக்கிள் நிறுவனம், இந்தியாவின் ‘லோஹியா மோட்டார்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் செயல்பட்டு வருகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகளுக்கு போட்டியாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தற்போது 4 வகையிலான Cruiser பைக்குகளை Renegade பிராண்டின் கீழ் சந்தைப்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக ஒரு Cruiser வகை பைக்கை ரூ.1.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் களமிறக்க உள்ளது.
விரைவில் டெலியில் நடக்க இருக்கும் ஆட்டோ கண்காட்சியில் புதிய Cruiser வகை மாடல் பைக் ஒன்றை UM நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய பைக் 230 சிசி 4 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்டதாக இருக்கும், இது அதிகபட்சமாக 20 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தவல்லதாகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் விலை ரூ.1.5 லட்சத்திற்கும் குறைவானதாக இருக்கும் என தெரிகிறது.

இந்த புதிய Renegade பைக் ராயல் என்ஃபீல்டு Thunder Bird 350 UCE பைக்குக்கு நேரடி போட்டியாளராக களமிறக்கப்படுகிறது.
இதில் குறைந்தபட்ச விலை கொண்ட மாடலான Sport ரூ.1.59 மதிப்புள்ளதாகும், இதே போல அதிகபட்ச விலை கொண்ட மாடலாக Classic உள்ளது. இதன் விலை ரூ.1.95 லட்சம் ஆகும்.
இதோடு மத்திய தரத்திலான Commando, Mojave ஆகிய இரண்டு மாடல்களும் ரூ.1.76 லட்சம் விலை கொண்டவையாகும்.
மேலும் டெல்லியில் நடக்க இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிதாக எலெக்ட்ரிக் வகை Cruiser பைக் ஒன்றையும் UM Renegade களமிறக்க உள்ளது. இருப்பினும் இந்த வகை பைக்குகளின் வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்க சில ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: