Tuesday, April 16, 2024

நாகையில் மஜகவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமூகநீதி பொதுக்கூட்டம்..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- மாவட்டச் செயலாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் உ.தனியரசு MLA, மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவுலா.நாசர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.அலாவுதீன், துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், சீனி முகம்மது, ராசூதீன், மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக மண்டல செயலாளர் மதுக்கூர் அப்துல்காதர், மாநில துணைச் செயலாளர்கள் தோப்புதுறை ஷேக் அப்துல்லாஹ், பாபு ஷாஹின்ஷா, திருமங்கலம் ஷமீம், மாநில விவசாயிகள் அணிச் செயலாளர் நாகை. முபாரக், மீனவர் அணி மாநிலச் செயலாளர் பார்த்திபன், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா ஆகியோர் உரையாற்றினார்.

சமூக மக்கள் கட்சித் தலைவர் அம்பி வெங்கடேசன், நாகூர் முஸ்லிம் சங்க தலைவர் V.S.சாதிக், அப்துல் கலாம் மக்கள் இயக்க தலைவர் செந்தமிழன் மற்றும் கர்நாடகா முஸ்லிம் முத்தஹிதா தஹ்ரிக் (KMMT) தலைவர் முக்தார் அஹமத், கார்மேகம், பட்டதாரி, ஆசிரியர்கள் சங்க தலைவர் வடிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அரங்கத்தில், முன்னதாக தமிழை தேசிய மொழியாக்க குரல் கொடுத்த காயிதே மில்லத்தின் பெயரால் கொடி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

மேடைக்கு சமூக நீதி காத்த வீராங்கனை ஜெ.ஜெயலலிதா அம்மா மேடை என பெயர் சூட்டப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் நடைபெற்ற அவுரித் திடலுக்கு சமூக நீதிப் போராளி முன்னாள் பிரதமர் V.P சிங் என்றும், நீட் தேர்வு எதிர்ப்பு போராளி தியாகி அனிதா என்றும் நுழைவாயில்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.

பெண்கள் பகுதிக்கு தூய்மையான பொது வாழ்வின் ஊழியர் என்று அழைக்கப்பட்ட அன்னை தெரஸா அவர்களின் பெயரும், ஆண்கள் பகுதிக்கு தமிழர்களின் இனமானம் காத்த தந்தை பெரியாரின் பெயரும் சூட்டப்பபட்டிருந்தது.

அரங்கத்திற்கு வெளியே புத்தக கடைகள் நிறைய இருந்தன. அங்கும் கூட்டம் அலைமோதியது.

இக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி அவர்களின் 22 மாத தொகுதி செயல்பாடு அறிக்கையை கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலவி நாசர் வெளியிட மூத்த தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.

மஜக தலைமைக் கழக வளர்ச்சி நிதியாக 1 லட்சம் ரூபாயை நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களிடம் வழங்கினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், வாஞ்சூர் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும், தமிழக மீனவர்களின் கடல் உரிமையை பாதுகாக்க வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்., நீட் தேர்வை இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...