சிரியாவில் பலநூற்று கணக்கான பொதுமக்கள் மற்றும் குழந்தைகளும் கொள்ளப்படும் சம்பவம் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாடு போர் மூலம் ஒன்றுமே அறியாத சிரியா மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், பலர் முகநூல் , வாட்சப்ப் மூலம் தங்களின் ஆதரவையும் சிரியா மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்ற வார்த்தையும் பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
இதனை தொடர்ந்து, தமுமுக போன்ற இஸ்லாமிய இயக்கங்களும் கட்சிகளும் போராட்டங்களை நடத்துவது குறித்து தகவல் வெள்ளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்ற ஆர்.அப்துல் கரீம் (மாநில துணை தலைவர், TNTJ),
வருகைதருகிறார்.
இப்போராட்டத்திற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Your reaction