விமானங்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது..!!!

1686 0


விமானங்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதால் விமானக் கட்டணங்களில் 30 சதவிகிதம் கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வாய்ஸ் கால், இன்டர்நெட் டேட்டா உள்ளிட்ட சேவைகளை அனுமதிப்பதற்கான உத்தரவை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் வெளியிட்டது.

இந்த அறிவிப்பானது விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இனி அவர்கள் விமானத்தில் பயணிக்கும்போது செல்ஃபி புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தாராளமாகப் பதிவேற்ற முடியும். அதேநேரம் இந்த சேவையில் விமானப் பயணக் கட்டணங்களும் உயரவும் உள்ளன.

இதற்கு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் இணையச் சேவையை பயன்படுத்தும்போது பயணிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று விமானத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் ரூ.1,200 முதல் ரூ.2,500 வரை கொடுத்து முன்பதிவு செய்து உள்நாட்டுக்குள் பயணம் மேற்கொள்ளும் சாதாரண மக்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படும். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள வரவுள்ளதால், விமான நிறுவனங்கள் இணைய இணைப்பைப் பெறுவதற்காக தற்போது ஆண்டெனா பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

‘உள்நாட்டிலோ சர்வதேச அளவிலோ பயணம் மேற்கொள்ளும் தொழிலதிபர்கள் மட்டுமே விமானங்களில் இணைய இணைப்பைப் பெறலாம். சாதாரண மக்கள் இச்சேவையைப் பெற விரும்ப மாட்டார்கள்’ மேலும், லூஃப்தானா, எமிரேட்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட ஒரு சில விமானங்களில் வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்றவற்றை இலவச வைஃபை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: