தமிழகத்தில்மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட நிதியை விட 14வது நிதி கமிஷன் மூலம் தமிழகத்துக்கு 1.80 லட்சம் கோடியை பாஜ அரசு வழங்கி உள்ளது என்று கூறினார் .விழாவில் பிரதமர் மோடி , அன்புமிக்க சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழ் மண்ணிற்கும், மொழிக்கும், பாரம்பரியத்திற்கும், உங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். “எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று சொன்ன மகாக் கவி சுப்பிரமணிய பாரதியின் மண்ணிலே நிற்பதற்கு பெருமைப்படுகிறேன். பெண்ணே நீ மகத்தானவள்என்று தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.பெண்களுக்கான திட்டம் என்பதால் விழாவில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நேற்று மொத்தம் 1000 பேருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

Your reaction