உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை கரைக்க இதைச் சாப்பிடுங்க..!!

2158 0


ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களில் 80 சதவீத மக்கள் இதய நோயால் தான் இறக்கிறார்கள், மாரடைப்பு மரணத்திற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. அவர்களது உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றினால் மாரடைப்பு ஏற்படுகிறது என்றாலும் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை என்பதும் முக்கியமான ஓர் காரணமாக பார்க்கப்படுகிறது.

நம் உடலில் சேர்கிற அதிகப்படியான கொழுப்பு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லக்கூடிய வழித்தடங்களில் படிகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது எல் டி எல் எனப்படுகிற கொழுப்பு தான். இதனை கெட்ட கொழுப்பு என்கிறார்கள். ரத்த நாளங்களில் அடைத்துக் கொண்டு ரத்த ஓட்டத்தை இது தடை செய்கிறது.

கெட்ட கொழுப்பு:

பிற கொலஸ்ட்ரால் துகள்களை விட எல் டி எல் கொலஸ்ட்ராலின் அடர்த்தி அதிகமாக இருக்கும். அதனால் எளிதாக இவை ரத்த நாளங்களில் படிந்திடும், இவை ஒரு நாளிலோ அல்லது குறிப்பிட்ட குறுகிய காலத்தில் நிகழ்வது அல்ல, இப்படி கொழுப்பு படியும் வேலை உங்களது குழந்தை பருவத்திலிருந்தே துவங்கி விடுகிறது.

என்ன செய்யலாம் ? முறையான மருந்துகள், உடற்பயிற்சி இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நீங்கள் சாப்பிடுகிற உணவு, உடற்பயிற்சியும், மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வழக்கம் போல கொழுப்பு நிறைந்த உணவுகளையே எடுத்துக் கொண்டால் அவை பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். நம் உடலுக்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய சத்துக்களைப் போலவே தினமும் குறிப்பிட்ட அளவு கொழுப்பும் தேவைப்படுகிறது. கொழுப்பு தேவை என்றதும், தினமும் ஒரு ஜங்க் ஃபுட் சாப்பிடலாம் என்று அர்த்தம் கிடையாது.

ஆரஞ்சு ஜூஸ் :

தினமும் ஆரஞ்சு பழச்சாறு அருந்துங்கள். காலையில் அருந்தினால் நல்லது, பழமும் சாப்பிடலாம். கடைகளில் வாங்கிக் குடிப்பது, புட்டிகளில் அடைக்கப்பட்ட ஜூஸ் குடிப்பது போன்றவற்றை எல்லாம் தவிர்த்திடுங்கள். அதே போல சர்க்கரை சேர்ப்பதையும் தவிர்த்திடுவிடுவது நலம். இவை தொடர்ந்து சாப்பிட்டு வர கெட்ட கொழுப்பினை கரைக்கும் வேலையை செய்திடும்.

குறைவான உணவு :

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு முறை வரை உணவு உட்கொள்ளும் நபர்களுக்கு அவர்கள் உடலில் படிந்திருக்கக்கூடிய கொழுப்பு கரைகிறதாம். இந்த ஆறேழு முறை சாப்பிடுபவர்கள், கொழுப்பு உணவுகளைத் தவிர்த்துவிடுவது முக்கியம்.

மக்னீசியம் :

மக்னீசியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். உடலுக்கு மிகவும் அவசியமான தாது உப்புகளில் மக்னீசியமும் ஒன்று. நம் உடலில் ரசாயன செயல்பாடுகளுக்கும், இதயம் சீராக துடிக்கவும்,ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரவும் மக்னீசியம் பெரிதும் உதவுகின்றது. அதோடு நாம் எடுத்துக் கொள்கிற கார்போஹைட்ரேட் எனர்ஜியாக மாற்றவும் இது உதவிடுகிறது.வாழை,அவகோடா,பாதாம்,முந்திரி,பயிறு வகைகள்,முழு தானியங்கள்,பால் ஆகியவற்றில் மக்னீசியம் இருக்கிறது. மக்னீசியம் உடலில் குறைவதால் தான் சோர்வு,வலுவின்மை ஆகியவை ஏற்படுகிறது.

விட்டமின் சி :

விட்டமின் சி ஒருவகை ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் . இது வெள்ளை அணுக்களை அதிகரிக்கச்செய்வதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் இந்த சத்து உடலில் சேமித்து வைக்க முடியாது. ஒரு நாளைக்கு எடுத்தால் அதனை பயன்படுத்திக் கொண்டு சிறுநீர் வழியாக வெளியேறிடும். வெள்ளரிக்காய்,நெல்லிக்காய்,ஆரஞ்சு,எலுமிச்சை,தக்காளி,கீரை வகைகள், ப்ரோக்கோலி,திராட்சை,பப்பாளி,ஸ்ட்ராபெர்ரி,அன்னாசிப்பழம் ஆகியவற்றில் விட்டமின் சி இருக்கிறது. விட்டமின் சி நம் உடலில் குறைவதால் மன அழுத்தம் ஏற்படும், அதோடு ஹார்மோன்களின் சமமின்மை காரணமாக நிம்மதியான தூக்கம் வராது, அதோடு ரத்த அழுத்தமும் சீராக இருக்காது.

க்ரீன் டீ :

கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு ,கேட்டச்சின் முதலான பாலிபீனால்கள் அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இவை நம் உடலில் சேர்ந்திருக்கக்கூடிய கொழுப்பினை கரைக்கும் வேலையைச் செய்கிறது.

ஆப்பிள் :

ஆப்பிளில் இருக்கக்கூடிய பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் படிந்திருக்ககூடிய கெட்ட கொழுப்பை கரைத்திடும். இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவிடும். ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின், உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரித்து, நுரையீரலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.இதனால் மூச்சுத்திணறல் தவிர்க்கப்படும். இதில் உள்ள பாலிஃபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். அதோடு தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வர ரத்த சோகையை தவிர்க்கலாம்.

பூண்டு :

ஏஞ்சியோடென்சின் II என்ற புரதம் நம் இரத்த குழாய்களை சுருங்க வைக்கும். இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும். இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும். வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும். மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும். இரும்புச்சத்தை உறிஞ்சவும், வெளியற்றவும் உதவுவது ஃபெர்ரோபோர்டின் என்ற புரதம் தான். பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு, ஃபெர்ரோபோர்டின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: