தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் போகும் சாலையில் அமைந்துள்ள மவுண்ட் கார்மல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்த பெரியக்கோட்டை மெயின்ரோடு ரவிச்சந்திரன் அவர்களின் மகன் சந்தோஷ் என்ற மாணவனை பள்ளியின் இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறி சந்தோஷ்ராஜ் உட்பட 10 மாணவர்களை முதல்வர் ராம்தாஸ் செல்லையா, இயற்பியல் ஆசிரியர் ராஜா ஆகியோர் கண்டித்து வீட்டுக்கு திருப்பி அனுப்பினர்.வெளியேற்றியதால் மனமுடைந்த மாணவன் சந்தோஷ் தற்கொலை செய்துகொண்டார்
இதைகண்டு அதிர்ச்சியடைந்த பெற்றொர் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் முறையிட்ட போது, அவர்கள் அலட்சியாமாக பதிலளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். துகவலறிந்ததும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Your reaction